Joker 2: இதுலயும் அதே டான்ஸ்.... வில்லத்தனமான காதல் படத்தின் 2வது போஸ்டர் வெளியீடு

ஜோக்கின் ஃபீனிக்ஸ் மற்றும் லேடி காகா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜோக்கர்: போலி ஏ டியூக்ஸ்’ படத்தின் 2வது போஸ்டர் வெளியாகியுள்ளது.

Aug 20, 2024 - 17:39
Aug 21, 2024 - 10:15
 0
Joker 2: இதுலயும் அதே டான்ஸ்.... வில்லத்தனமான காதல் படத்தின் 2வது போஸ்டர் வெளியீடு
ஜோக்கர்: போலி ஏ டியூக்ஸ்’; 2வது போஸ்டர் வெளியீடு

உலக சினிமா என்று எடுத்துக்கொண்டாலே ஹாலிவுட்டிற்கு என தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அதிலும் ஹாலிவுட் சினிமாவில் வரும் ஒரு சில குறிப்பிட்ட கேரக்டர்கள், நம்மை அதிகளவில் பாதிக்கக்கூடும். அப்படியான சில கேரக்டர்களில் ஜோக்கரும் ஒன்று. டிசி காமிக்ஸ் வில்லனான ஜோக்கர் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் ‘ஜோக்கர்’. டோட் பிலிப்ஸ் இயக்கத்தில் ஜோக்கின் ஃபீனிக்ஸ் நடிப்பில் வெளியான இப்படம் சர்வதேச அளவில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. ஜோக்கர் என்றாலே பச்சை நிற தலைமுடி, கிளவுன் மேக் அப், சிகப்பு டக்ஸிடோ கோட் சூட் என அந்த உருவம் நமது மனதில் அப்படியே பதிந்திருக்கும். 

பொதுவாக சிரிக்கிறதுக்காகவே உருவாக்கப்பட்ட இந்த ஜோக்கர் கதாபாத்திரம் மூலம், முழு வில்லத்தனத்தையும் பயத்தையும் கூட காண்பிக்க முடியும் என்பதை முதன்முதலாக அடிபோட்டது ‘பேட் மேன் - தி டார்க் நைட்’ திரைப்படம். இதில் ஜோக்கர் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்த ஹீத் லெட்ஜர் தனது மிரட்டலான நடிப்பு மற்றும் வில்லத்தனத்தின் மூலம் ரசிகர்களைத் தன்வசப்படுத்தினார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. சொல்லப்போனால் பேட் மேனிற்கு இருந்த ரசிகர்களை விட ஜோக்கருக்கு இருந்த ரசிகர்களே அதிகம். இதையடுத்து ஜேம்ஸ் கன், டேவிர் அயர் ஆகியோர் இயக்கத்தின் வெளியான ‘சூசைடு ஸ்குவாடு’ திரைப்படத்தில் வரும் ஜோக்கர் கதாபாத்திரத்தை ஜேரட் லெடோ நடித்திருப்பார். அப்படத்தில் அவரது சிரிப்பிற்காகவே நிறைய ரசிகர்கள் இருந்தனர். 

மேலும் படிக்க: அக்ரிமெண்ட் டைம் முடிந்தும் விளம்பரம்... பிரபல நகை கடைக்கு எதிராக தமன்னா வழக்கு!

இந்த வரிசையில் அடுத்ததாக வெளியான திரைப்படம்தான் ஜொக்கர். ஜோக்கின் ஃபீனிக்ஸ் நடிப்பில் வெளியான இப்படம் சர்வதேச அளவில் மிகப்பெரிய ஹிட் அடித்து பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்‌ஷனை அள்ளியது. இப்படத்தில் அழுதுகொண்டே சிரிக்கும் காட்சிகள், நடை, படிகட்டுகளில் அவர் ஆடும் நடனம் என அனைத்துமே ரசிகர்களை மிரள வைத்தது என்றே கூறலாம். இந்நிலையில் இப்படத்தின் 2ம் பாகம் ‘ஜோக்கர்: போலி ஏ டியூக்ஸ்’ என்ற பெயரில் இந்த ஆண்டு அக்டோபர் 4ம் தேதி வெளியாகிறது. ஜோக்கராக ஜோக்கின் ஃபீனிக்ஸ் மற்றும் ஹார்லி குயினாக லேடி காகா திரையில் மிரட்ட வருகிறார்கள். அண்மையில் வெளியான இப்படத்தின் ட்ரெயிலர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஜோக்கர் மற்றும் ஹார்லி குயினின் அந்த ‘Mad Love' அதாவது பைத்தியக்காரத்தனமான காதலைப் பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். அதற்கு தீனி போடும் விதமாக இப்படத்தின் 2வது போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை லேடி காகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow