Paris Olympics: பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி தொடர்... அயர்லாந்தை வீழ்த்தி இந்திய ஆடவர் அணி அபாரம்!

India Mens Hockey Team Wins in Paris Olympics 2024 : பாரிஸில் நடைபெற்று வரும் 33வது ஒலிம்பிக் தொடரில், இந்திய ஆடவர் அணி அயர்லாந்தை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Jul 30, 2024 - 20:37
Jul 31, 2024 - 10:46
 0
Paris Olympics: பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி தொடர்... அயர்லாந்தை வீழ்த்தி இந்திய ஆடவர் அணி அபாரம்!
ஒலிம்பிக் ஹாக்கி லீக் போட்டியில் இந்திய அணி வெற்றி

India Mens Hockey Team Wins in Paris Olympics 2024 : உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த வாரம் தொடங்கியது. 33வது ஒலிம்பிக் தொடரான இதில் 6 நாடுகளைச் சேர்ந்த 10,500 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற ஹாக்கிப் போட்டியில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா – அயர்லாந்து அணிகள் மோதின. லீக் போட்டியான இதில் வெற்றிப் பெற்றால், காலிறுதிச் சுற்றை உறுதி செய்துவிடலாம் என்ற முனைப்பில் இந்திய வீரர்கள் ஆட்டத்தைத் தொடங்கினர்.  

இதனால் இந்திய அணி வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினர். இதற்கு பலனாக இந்திய அணி, 2-0 என்ற கணக்கில் அயர்லாந்து அணியை அபாரமாக வென்றது. இதனையடுத்து பி பிரிவில் முதலிடம் பிடித்துள்ள இந்திய அணி, காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இந்திய அணி விளையாடிய 3 ஆட்டங்களில், இரண்டில் வெற்றி, ஒரு டிரா என மொத்தம் 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. இந்நிலையில், அயர்லாந்து அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில், இந்தியா தரப்பில் ஹர்மன்ப்ரீத் சிங் 2 கோல்களை அடித்து வெற்றிக்கு வித்திட்டார். இதனையடுத்து இந்திய ஹாக்கி ஆண்கள் அணிக்கு பலதரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.  

முன்னதாக 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில், ஹரியானாவைச் சேர்ந்த மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கல பதக்கம் வென்றது. இந்த இணை தென்கொரிய அணியை 16-10 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வசப்படுத்தினர். ஏற்கனவே கடந்த 28ம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், வெண்கலம் வென்றதன் மூலம் இப்பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சாதனையை மனுபாக்கர் படைத்துள்ளார். அத்துடன் ஒரே ஒலிம்பிக் தொடரில் இரு பதக்கங்களை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் அவர் வசமானது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே வெண்கலப் பதக்கம் வென்ற துப்பாக்கிச் சுடுதல் வீரர் சரபோத் சிங்கிற்கு, பிரதமர் நரேந்திர மோடி வீடியோ காலில் வாழ்த்து தெரிவித்தார். தேசத்திற்கு மகத்தான பெருமை சேர்த்திருக்கிறீர்கள் எனவும், தங்களின் முயற்சிகள் நல்ல பலனைத் தந்துள்ளதாகவும் அவர் பாராட்டினார்.  இதேபோல் ஒலிம்பிக் துடுப்பு படகு போட்டியில், இந்தியாவின் பல்ராஜ் பன்வார் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.  காலிறுதி போட்டியில் 6 பேர் பங்கேற்ற நிலையில், 2 ஆயிரம் மீட்டர் தொலைவை 7.05 நிமிடங்களில் கடந்து 5-வது இடத்தைப் பிடித்தார். புதன்கிழமை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் அவர் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow