உனக்கு அறிவு இருக்கா?..எங்க வந்து என்ன கேள்வி கேட்டகுற.. டென்சன் ஆன நடிகர் ஜீவா

எங்க வந்து கேள்வி என்ன கேள்வி கேட்குற என்று நடிகர் ஜீவா டென்சன் ஆகியுள்ளார். செய்தியாளர்கள் ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி கேட்டதற்கு உனக்கு அறிவு இருக்கா என்று செய்தியாளரை கேள்வி எழுப்பியுள்ளார்.

Sep 1, 2024 - 13:29
 0
உனக்கு அறிவு இருக்கா?..எங்க வந்து என்ன கேள்வி கேட்டகுற.. டென்சன் ஆன நடிகர் ஜீவா
actor jiiva tention

கேரளா திரையுலகில் ஹேமா கமிட்டி தொடர்பான அறிக்கை பூதாகரமாகியுள்ளது. அடுக்கடுக்காக நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமைகளை புகார்களாக தெரிவித்து வருகின்றனர்.நடிகர் ஜீவாவிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப அதற்கு டென்சன் ஆகி கத்தியுள்ளார். என்னதான் நடந்தது தேனியில் பார்க்கலாம். 

தேனி-மதுரை சாலையில் உள்ள ஜவுளிக்கடை திறப்பு விழாவிற்காக நடிகர் ஜீவா வந்தார். தொடர்ந்து ஜவுளிக்கடையைத் திறந்து வைத்துவிட்டு அங்குள்ள ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அப்போது அவரிடம் செய்தியாளர்கள் மலையாள சினிமா உலகத்தில் பாலியல் புகார் குறித்து ஹேமா கமிட்டி அளித்த அறிக்கை தொடர்பாக கேள்விகளை எழுப்பினர்.அவர் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அங்கிருந்து செல்ல முயன்றார்.

தொடர்ச்சியாக செய்தியாளர்கள் விடாமல் ஜீவாவிடம் கேள்வி கேட்டனர். அதற்கு நடிகர் ஜீவா அது எனக்கு தெரியாது' என்பதைப் போன்ற பதிலை தெரிவித்ததாகவும், எல்லா துறைகளிலுமே இதுபோன்ற புகார்கள் இருக்கிறது என்றும், இதற்கு பதில் சொல்லவில்லை'' என்று சொன்னதாக கூறப்படுகிறது.

'நீங்கள் நடிகர் என்பதால் தான் ஹேமா கமிட்டி குறித்து ஒரு கேள்வியை கேட்டோம்' என்று செய்தியாளர் கேட்டதற்கு எழுந்து சென்ற ஜீவா, மீண்டும் திரும்பி வந்து கேள்வி கேட்ட செய்தியாளர் ஒருவரிடம் ''உனக்கு அறிவு இருக்கா?" நான் இங்க எதுக்கு வந்திருக்கேன். எங்க வந்து என்ன கேள்வி கேட்கிற என்று டென்சனாக கத்தினார். இதற்கு செய்தியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜீவாவிடம் செய்தியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடத்தில் சலசலப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் நடிகர் ஜீவாவை பத்திரமாக அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow