மீண்டும் படையெடுத்த ஓவியா ஆர்மி.. திணறும் சோசியல் மீடியா.. என்ன காரணம்?

நடிகை ஓவியாவின் ஆபாச வீடியோக்கள் கசிந்ததை அடுத்து, சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

Oct 14, 2024 - 02:24
Oct 14, 2024 - 02:36
 0
மீண்டும் படையெடுத்த ஓவியா ஆர்மி.. திணறும் சோசியல் மீடியா.. என்ன காரணம்?
நடிகை ஓவியாவின் ஆபாச வீடியோ - சமூக வலைத்தளங்களில் சர்ச்சை

மலையாளத்தில் கங்காரு திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஓவியா, தமிழில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான ‘களவாணி’ திரைப்படம் மூலம் தமிழில் பிரபலமான நடிகையாக வலம் வந்தார். தொடர்ந்து, மெரினா, கலகலப்பு, மூடர்கூடம், மதயானைக் கூட்டம், யாமிருக்க பயமே ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்தார்.

பின்னர் 2017ஆம் ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய விஜய் டிவியின் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் முதல் சீசனிலேயே, மீண்டும் பிரபலம் அடைந்தார். அந்த நிகழ்ச்சியில், ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றார் நடிகை ஓவியா. அப்போதே, ‘ஓவியா ஆர்மி’ சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலம் அடைந்தது.

அந்த நிகழ்ச்சியில், நடிகர் ஆரவ் மீது நடிகை ஓவியா காதல் கொண்டதாக கிசுகிசு பேசப்பட்டது. மேலும் ஓவியாவின் 'மருத்துவ முத்தம்' மிகவும் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டது. அங்கு நடந்த சில கருத்து வேறுபாடு காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து பாதியில் வெளியேறினார்.

இந்நிலையில், ஓவியாவின் நிர்வாண வீடியோ ஒன்றை அவருடைய சம்மதம் இல்லாமல் இணையத்தில் யாரோ கசிய விட்டுள்ளனர். இது சமுகவலைத்தளங்களில் வெகுவாக பரவப்பட்டு வருகிறது. இதில், பெண்ணியவாதிகள், முற்போக்குவாதிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலரும் பின்னூட்ட கருத்துகளை வெளியிட்டதோடு, புத்திமதியையும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர்.

அந்த வீடியோ பெரும் பேசுபொருளாகி மாறியுள்ளதற்கு மற்றொரு முக்கிய காரணம், அவரின் இன்ஸ்டா பக்கத்தில், முழு வீடியோவும் பகிருங்கள் என்றும் வீடியோ தெளிவாக இல்லை என்று கூறி தங்களது வக்கிர புத்தியை காட்டியுள்ளனர். ஆனால், அதற்கும் சளிக்காமல் பதிலளித்துள்ள நடிகை ஓவியா, 'ஓகே ஓகே என்ஜாய்' என்றும் வீடியோ தெளிவாக இல்லை என்ற கேள்விக்கு 'நெக்ஸ்ட் டைம் ப்ரோ' என்றும் பதிலளித்திருக்கிறார்.

ஆனால், ஒரு தனிப்பட்ட நபரின் அந்தரங்க விஷயத்தில் இவ்வளவு ஆர்வம் ஏன் காட்ட வேண்டும் என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இது போன்ற வீடியோக்களை வெளியிடுபவர்களின் நோக்கம் என்னவாக இருக்க முடிவும்? ஏதோ ஒரு வகையில் அந்தப் பெண்ணைப் அவமானத்திற்கு உள்ளாக்குவதும், அவரை குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்குவதும் தானே இருக்க முடியும்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால், பொள்ளாச்சி பள்ளி மாணவிகள், பாலியல் விவகாரம் பூதகரமானதும், பொங்கியெழுந்த தமிழ் குடிமக்கள், தற்போது நடிகை என்ற காரணத்திற்கு, அவரின் தனிப்பட்ட செயல்பாடுகள், அல்லது நடவடிக்கைகளை ரசித்து, புளகாங்கிதம் அடைந்து கொண்டிருக்கிறார்கள்.

கொல்கத்தாவின் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமையால் துடித்துப்போன ஆணாதிக்க சமூகம், கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாம் என்ற பெயரில் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டபோது கொதித்துபோன தமிழ் சமூகம் நடிகை ஓவியாவின் வீடியோவிற்கு வாய் பிளந்து வழிந்துகொண்டு இருக்கிறது.

தற்போதுதான் சில பெண்கள் தங்களின் தடைக்கற்கள் எல்லாம் உடைத்து எறிந்துவிட்டு, சமூக அங்கீகாரத்திற்கு தன்னம்பிக்கையோடு போராடுகையில், இதுபோன்ற செயல்களால், அவர்களை மீண்டும் வீட்டுக்குள் பூட்டிவைக்க முயல்வதாக, சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இன்றைய இணைய உலகில், எதுவுமே தனிப்பட்ட அந்தரங்க விஷயமாக இல்லாமல், அனைவரும் ஏதோ ஒரு வகையில் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறோம் என்பதே உண்மை. வாங்கிய கடனை திருப்பு தராவிட்டால் கூட, தங்களது குடும்பத்தினரின் புகைப்படங்களை [குறிப்பாக பெண்களின் புகைப்படங்களை] வெளியிடுவோம் என மிரட்டி வருகின்றனர். அதுவும் மார்ஃபிங் செய்து வெளியிடுவோம் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுக்கும் செய்திகளை நாம் பார்த்து வருகிறோம்.

ஆனால், ஒரு வகையில் நடிகை ஓவியாவின் பதிலை பாராட்டமல் இருக்க முடியவில்லை. அதாவது, ஒருவர் ஏதோ ஒருவகையில் உங்களை கேலிக்கும், கிண்டலுக்கு உள்ளாக்கும் போது, நீங்கள் கூனிக் குறுகிப் போகாமல் ஒரு வார்த்தையில் பதிலளித்து விட முடியும். அதைத்தான் ஓவியா செய்திருக்கிறார். ‘நான் அப்படித்தான்.. நீங்கள் உங்கள் வேலியைப் பார்க்கலாம்..’ என்பது தான் அது.

இதே போல, சன்னி லியோனிடம் அவருடைய பழைய நிர்வாணப் படங்கள் குறித்துக் கேட்டபோது, “அது நான் விரும்பி ஏற்றுக் கொண்ட எனது வாழ்க்கையின் ஒரு பகுதி. அது குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் அதைக் கடந்து வந்துவிட்டேன். நீங்கள்தான் இன்னும் வரவில்லை” என்று பதிலளித்திருந்தார். அதேபோன்ற பதிலை தான் நடிகை ஓவியாவும் சொல்லாமல் சொல்லியுள்ளார்.

- லெனின் அகத்தியநாடன்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow