இலங்கை பவுலர்களை ஓடவிட்ட SKY.. அதிரடி அரைசதம்.. இந்திய அணி 213 ரன்கள் குவிப்பு!

India Vs Sri Lanka First T20 Match Highlights : ரன் வேகம் குறையாமல் பார்த்துக் கொண்ட சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 8 பவுண்டரி 2 சிக்சருடன் 58 ரன் அடித்து அவுட் ஆனார். மறுபக்கம் இவருக்கு பக்கபலமாக விளங்கிய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பவுண்டரிகளாக விளாசித் தள்ளினார். 33 பந்தில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் அவர் 49 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

Jul 27, 2024 - 21:23
Jul 29, 2024 - 10:29
 0
இலங்கை பவுலர்களை ஓடவிட்ட SKY.. அதிரடி அரைசதம்.. இந்திய அணி 213 ரன்கள் குவிப்பு!
India Vs Sri Lanka First T20 Match Highlights

India Vs Sri Lanka First T20 Match Highlights : இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட 50 ஓவர் ஒருநாள் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடுகிறது. முதல் டி20 போட்டி இலங்கையின் பல்லேகலே மைதானத்தில் இன்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்தது. இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்தியாவுக்காக முதலில் களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் துணை கேப்டன் சுப்மன் கில் இருவரும் இலங்கை பெளலர்களின் பந்துவீச்சை விளாசித் தள்ளினார்கள். 

தொடக்க விக்கெட்டுக்கு 6 ஓவரில் 74 ரன் என மின்னல் வேகத்தில் ரன் சேர்த்த இந்த ஜோடி பிரிந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 21 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 40 ரன் எடுத்து அவுட் ஆனார். சுப்மன் கில் 16 பந்தில் 34 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். பின்பு களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், அதிரடியில் வெளுத்து கட்டினார். நாலாபுறமும் பந்துகளை ஓடவிட்ட அவர், அதிரடி அரைசதம் விளாசினார்.

ரன் வேகம் குறையாமல் பார்த்துக் கொண்ட சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 8 பவுண்டரி 2 சிக்சருடன் 58 ரன் அடித்து அவுட் ஆனார். மறுபக்கம் இவருக்கு பக்கபலமாக விளங்கிய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பவுண்டரிகளாக விளாசித் தள்ளினார். 33 பந்தில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் அவர் 49 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா (9 ரன்), அறிமுக வீரர் ரியான் பராக் (7 ரன்), ரிங்கு சிங் (1) என அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்தியாவின் ரன் வேகம் சற்று குறைந்தது. ஆனாலும் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழந்து 213 ரன்கள் குவித்தது. இலங்கை அணி தரப்பில் சிஎஸ்கே வீரர் மதீஷா பதிரனா 4 ஓவர்களில் 40 ரன் கொடுத்து 4 விக்கெட்கள் சாய்த்தார். இமாலய இலக்கை நோக்கி இலங்கை அணி பேட்டிங் செய்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow