திருவண்ணாமலை கோவிலில் தேவாரம் பாடிய சத்குரு குருகுல மாணவர்கள்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சத்குரு குருகுல மாணவர்களின் தேவார பண்ணிசை அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நேற்று (ஜன.20) நடைபெற்றது. பாரம்பரிய பண்ணிசை மரபில் மாணவர்கள் பாடிய தேவார பதிகங்களை நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் கேட்டு மகிழ்ந்தனர்.