K U M U D A M   N E W S

Author : Vasuki

தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்... பதிலளிக்க மறுத்த Premalatha Vijayakanth

தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமை குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு

மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் அனுமதி

கண்டன ஆர்ப்பாட்டத்திற்காக அமைக்கப்பட்ட தவெக மேடை அகற்றம்

வேலூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்காக அமைக்கப்பட்ட மேடை அகற்றம்

கல் உடைக்கும் ஆலையில் தொழிலாளி பலி.. திமுக எம்எல்ஏ விடுதலை ரத்து!

கல் உடைக்கும் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி  பலியானது தொடர்பான வழக்கில், திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டியை விடுதலை செய்து கரூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உலக நன்மை வேண்டி நடைபெற்ற சரபேஸ்வரர் யாக பூஜை!

திண்டுக்கல்லில் உலக நன்மை வேண்டி நடைபெற்ற சரபேஸ்வரர் யாக பூஜையில் ஜப்பானியர்களின் கலந்து கொண்டு சாமி தரிசனம் நடத்தினர்.

அம்மனாக மாறிய நயன்தாரா! மூக்குத்தி அம்மன் 2... ஆரம்பமே அமர்க்களம்!

மூக்குத்தி அம்மன் 2 பட பூஜை விழாவில் நயன்தாரா பங்கேற்றிருந்தது கோலிவுட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அஜித் ரூட்டில் எந்த பட நிகழ்ச்சிகளுக்கும் செல்லாமல் கெத்து காட்டி வந்த நயன், மூக்குத்தி அம்மன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றது பல்வேறு விமர்சங்களை முன்வைத்துள்ளது.

Gnanasekaran Case: ஞானசேகரனின் கூட்டாளியை தட்டி தூக்கிய போலீசார்

ஞானசேகரனின் கூட்டாளி ஆன பொள்ளாச்சி முரளி என்பவரை கைது செய்த பள்ளிக்கரணை போலீசார்

நிர்வாகிகள் புகார் - நழுவி சென்ற Minister Anitha Radhakrishnan திமுகவினர் அதிருப்தி

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் புறக்கணிக்கப்பட்டதாக புகார்

Delimitation Row: தொகுதி மறுசீரமைப்பு - முதலமைச்சர்களுக்கு அழைப்பு

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர்களுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு

சென்னையில் 80 ஹோட்டல்கள் மீது பாயும் நடவடிக்கை

80 உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை போக்குவரத்து காவல்துறைக்கு மாநகராட்சி பரிந்துரை

இதை எதிர்பார்க்கல.. வேஷ்டி குல்லாவுடன் TVK தலைவர் Vijay வருகை

சென்னையில் தவெக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நோன்பு திறக்கும். நிகழ்வில் பங்கேற்க விஜய் வருகை

விஜயபாஸ்கருக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்

குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது

திருத்தணி கோர விபத்து.. பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அரசுப்பேருந்தும், லாரியும் மோதிய விபத்தில், பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்

போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் இன்று முதல் ஊதியம், நாளை முதல் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்ற உறுதியை ஏற்று வாபஸ்

சீமான் வீட்டின் பாதுகாவலர் ஜாமின் கோரி மனு

துப்பாக்கியை வைத்து மிரட்டியதாக கைது செய்யப்பட்ட சீமான் வீட்டின் பாதுகாவலர் மற்றும் பணியாளர் ஜாமின் கோரி மனு

TVK Iftar Event: இப்தார் விருந்து.. சற்று நேரத்தில் வரும் Vijay.. ஏற்பாடுகள் தீவிரம்

சென்னை, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தவெக சார்பில் இஃப்தார் விருந்து ஏற்பாடு

"மருத்துவ பாடத்திட்டம் தமிழில் வேண்டும்" - அமித்ஷா வலியுறுத்தல்..!

மருத்துவம், பொறியியல் பாடத்திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தமிழில் அறிமுகப்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தினார்.

பார்க்கிங் வசதி இல்லாத உணவகங்களுக்கு ஆபத்து..!

சென்னையில் உரிய பார்க்கிங் வசதி இல்லாத 80 உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை போக்குவரத்துக் காவல் துறை சென்னை மாநகராட்சிக்கு பரிந்துரை செய்துள்ளது.

Sunil Chhetri: மீண்டும் களத்திற்கு திரும்பிய சுனில் சேத்ரி.. மகிழ்ச்சியில் கால்பந்து ரசிகர்கள்..!

Sunil Chhetri Return India Team: இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் மீண்டும் சுனில் சேத்ரி மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

IND vs NZ: 25 ஆண்டுகால பகையை தீர்க்குமா இந்தியா.. இறுதிப்போட்டியில் யாருக்கு வெற்றி..?

2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது போலவே இந்த சாம்பியன் டிராபி போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. சாம்பியன் டிராபி தொடரில், 25 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்தியா நேருக்கு நேர் மோதுகின்றனர்.

காஞ்சிபுரத்தில் மிகப்பெரிய புற்றுநோய் ஆராய்ச்சி மையம் - அமைச்சர் தகவல்

மும்பையில் உள்ள டாடா புற்றுநோய் ஆராய்ச்சி மையத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவிலேயே மிகப்பெரிய புற்றுநோய் ஆராய்ச்சி மையம் காஞ்சிபுரத்தில் அண்ணாவின் பெயரால் 8 மாதங்களில் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.

பாலிவுட் சினிமாவை விட்டு வெளியேறுகிறேன் - அனுராக் காஷ்யப்

பாலிவுட் சினிமாவில் எதார்த்தம் இல்லை என்று கூறியுள்ள அனுராக் காஷ்யப், இனி பாலிவுட் திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என்றும்,  விரைவில் மும்பையை காலி செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நிலவுக்கே சென்றாலும் சாதியை தூக்கிச் செல்வார்கள் - சென்னை உயர்நீதிமன்றம்

நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும் சாதியை தூக்கிப் பிடிப்பவர்கள் அதனை கைவிட மாட்டார்கள். நிலவுக்கே சென்றாலும் சாதியை தூக்கிச் செல்வார்கள். படிப்படியாகவே மாற்றத்தை கொண்டு வர முடியும். அதற்கான நேரம் இது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழக முதலமைச்சர் அப்டேட்டாக இல்லை - தமிழிசை செளந்தரராஜன் விமர்சனம்

முதலமைச்சர் அவுட் டேட்டடாக இருக்கிறார் அப்டேட்டாக இல்லை என்று மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

ஜெகத்ரட்சகன் அலுவலகத்தில் ED ரெய்டு

சென்னை தியாகராயநகரில் உள்ள ஜெகத்ரட்சகனின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை