K U M U D A M   N E W S

Author : MUTHUKRISHNAN MURUGAN

என்ன தான் நடக்குது நாக்பூரில்? வன்முறை சம்பவத்துக்கு காரணம் சாவா திரைப்படமா?

மகாராஷ்டிராவில் நடந்து வரும் ஔரங்கசீப் கல்லறை தொடர்பான சர்ச்சை மற்றும் நாக்பூரில் நடந்த வன்முறை சம்பவத்திற்கு அடிப்படை காரணம் சமீபத்தில் வெளியான சாவா திரைப்படம் தான் என முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

சொத்து வரி கட்டாத கடைகளுக்கு குப்பைத் தொட்டியால் நெருக்கடி- மழுப்பும் மாநகராட்சி!

மதுரை மாநகராட்சியில் சொத்துவரியினை நீண்ட காலம் பாக்கி வைத்துள்ள வணிக கட்டிடங்கள், வீடுகள் முன்பு குப்பை தொட்டியினை வைத்து கட்டிட உரிமையாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் நடவடிக்கையை மாநகராட்சி ஊழியர்கள் தொடங்கியிருக்கிறார்கள்.

குளிக்க சென்ற பெண்ணை துரத்திய கரடி- திணறும் வனத்துறை அதிகாரிகள்!

நாங்குநேரி அருகே குளிக்க சென்ற பெண்ணை கரடி துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களை அச்சுறுத்தி வரும் கரடியை வனத்துறையினர் விரைந்து மயக்க ஊசி செலுத்தி பிடிக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

வெள்ளாடு வளர்ப்பில் பிசினஸ் பண்ண ஆசையா? சூப்பர் வாய்ப்பு காத்திருக்கு..

வெள்ளாடு வளர்ப்பு குறித்த பயிற்சியில் ஈடுபட விரும்புவோர் வருகிற 21.03.2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Gold price: இறங்க மனமில்லாத தங்கம்- மீண்டும் விலை உயர்வு!

சென்னையில் இன்று 22 கேரட் மதிப்புக்கொண்ட ஒரு சவரன் ரூ.66,000 ஆக விற்பனையாகிறது. நேற்றைய தினம் சவரன் ரூ.65,680 ஆக விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

ஒரே இரவில் 15 செம்மறி ஆடு உயிரிழப்பு- அச்சத்தில் கிராம மக்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள பண்டசீமனூர் ஊராட்சியின் மந்த காளிக்கனூர் கிராமத்தில் ஆடுகள் உயிரிழந்த சம்பவம் விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

CSK vs MI: சென்னை-மும்பை மோதும் ஐபிஎல் போட்டி.. ஆன்லைனில் டிக்கெட் பெறுவது எப்படி?

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

7 வயது சிறுமிக்கு கிட்டாரை பரிசாக வழங்கிய அமித்ஷா- எதற்காகத் தெரியுமா?

மிசோரமை சேர்ந்த இளம் பாடகி எஸ்தர் ஹ்னாம்டே, கடந்த 2020 ஆம் ஆண்டில் "மா துஜே சலாம்" என்ற பாடலினை பாடிய வீடியோ வைரலானதே தொடர்ந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

ஐபிஎல் போட்டிக்கு தாவிய ஆல்ரவுண்டர் வீரருக்கு வந்தது சிக்கல்!

தென்னாப்பிரிக்காவின் ஆல்-ரவுண்டர் கோர்பின் போஷூக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) ஒப்பந்த விதிகளை மீறியதாக குற்றம் சாட்டி நோட்டீஸ் அனுப்பியுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

3-வது கார் வாங்க போறவங்களுக்கு சிக்கல்: டெல்லி எடுக்கப்போகும் அதிரடி முடிவு

தனிநபர்கள் வாங்கும் மூன்றாவது கார் இனி மின்சார வாகனமாக தான் இருக்க வேண்டும் என டெல்லி அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.