துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோபமான உதயநிதி ஸ்டாலின், தமிழ்த்தாய் வாழ்த்தை மீண்டும் பாடச் சொல்லி ஊழியர்களை முறைத்துப் பார்த்தார். தமிழ்த்தாய் வாழ்த்தை திரும்ப பாட சொல்லியும் ஊழியர்கள் மீண்டும் தவறாக பாடினர். எத்திசையும் புகழ்மணக்க என்பதற்கு பதிலாக திகழ்மணக்க எனப்பாடிய வீடியோ வைரலாகி வருகிறது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்படவில்லை... தொழில்நுட்ப கோளாறு காரணமாக சரியாக கேட்கவில்லை என்பதால் மீண்டும் பாடப்பட்டது என விளக்கம் கொடுத்தார்.
வீடியோ ஸ்டோரி
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்தை மீண்டும் பாடச்சொல்லி ஊழியர்களை முறைக்க, அவர்கள் மீண்டும் தவறாக பாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.