வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த சந்திரபாபு நாயுடு.. திடீரென ரயில் வந்ததால் பரபரப்பு
ஆந்திராவின் விஜயவாடா பகுதியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்தார். அந்த சமயம் ரயில் தண்டவாளத்தின் அருகே உள்ள பாலத்தில் நின்று கொண்டிருந்த சமயத்தில் திடீரென ரயில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகளின் எச்சரிக்கையை தொடர்ந்து ரயில் நிறுத்தப்பட்டு, பாலத்தின் ஓரத்தில் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட அதிகாரிகள் பாதுகாப்பாக நின்ற பின்னர் ரயில் அவர்களை கடந்து சென்றது.