வீடியோ ஸ்டோரி

#BREAKING | எம்.ஆர்.சேகருக்கு 10 நாட்கள் நீதிமன்ற காவல் | MRV Brother Arrest

நிலமோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் உட்பட இரண்டு பேருக்கு 10 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

நிலமோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் உட்பட இரண்டு பேருக்கு 10 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.  

கரூரில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை போலி பத்திரப்பதிவு மூலம் மோசடி செய்துள்ளதாக, பிரகாஷ் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார், கேரளாவில் தலைமறைவாக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கரை கைது செய்தனர். தொடர்ந்து அவர் ஜாமின் கோரிய நிலையில், கரூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. 

அதன்பிறகு எம்.ஆர். விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர், முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால், சாட்சியை கலைக்க வாய்ப்புள்ளதாக காவல்துறை தெரிவித்த நிலையில், அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்கு தொடர்பாக முகாந்திரம் இருப்பின் சேகரை கைது செய்யலாம் என நீதிபதிகள் கூறிய நிலையில், கரூரில் தலைமறைவாக இருந்த சேகர் மற்றும் தோட்டக்குறிச்சி செல்வராஜ் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இதையடுத்து இருவருக்கும் வரும் 12-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து கரூர் விரைவு நீதிமன்ற நீதிபதி மகேஷ் உத்தரவிட்டுள்ளார்.