யூடியூப் சேனல் தொடங்கிய 24 மணி நேரத்துக்குள் 10 மில்லியன் பேர் 'யு ஆர் கிறிஸ்டியானோ' யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் (subscribe) செய்துள்ளனர். இதன்மூலம் அதி விரைவில் அதிக சப்ஸ்கிரைப் பெற்ற hamster kombat என்ற யூடியூப் சேனலின் சாதனையை ரொனால்டோ முறியடித்துள்ளார். அதாவது hamster kombat யூடியூப் சேனல் தொடங்கிய 7 நாளில் 10 மில்லியன் சப்ஸ்கிரைப் பெற்றுள்ளது. ஆனால் ரொனால்டோவின் UR Cristiano சேனல் 24 மணி நேரத்துக்குள் 10 மில்லியன் சப்ஸ்கிரைகளை கடந்துள்ளது. அதுவும் சேனல் தொடங்கிய 1 மணி நேரத்துக்குள் 1 மில்லியன் சப்ஸ்கிரைப் பெற்று கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை படைத்துள்ளார். இதுவரை 16.4 மில்லியன் பேர் ரொனால்டோவின் யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.
வீடியோ ஸ்டோரி
24 மணி நேரத்தில் Youtube- ஐ அலறவிட்ட Cristiano Ronaldo
உலகப்புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. தற்போது சவுதி அரேபியா லீக் தொடரில் அல் நசர் அணிக்காக விளையாடி வருகிறார். 39 வயதான ரொனால்டோ விளையாட்டில் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறார்.
LIVE 24 X 7









