தமிழ்நாடு

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்...அதிகளவில் குவிந்ததால் அலைமோதிய கூட்டம்

கோடை விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது.

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்...அதிகளவில் குவிந்ததால் அலைமோதிய கூட்டம்
கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
சுற்றுலா பயணிகள்

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் கோடை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். தமிழக மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் இருந்தும் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் நோக்கி படை எடுத்து வருகின்றனர்.

அதிக அளவிலான சுற்றுலா பயணிகளின் வருகை காரணமாக ஒரு சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சில்வர் பால்ஸ் பசுமை பள்ளத்தாக்கு பில்லர் ராக் குணா குகை பைன் பாரஸ்ட் மோயர் பாயிண்ட் ரோஸ் கார்டன் பிரையன் பார்க் செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களில் வாகனத்தில் இருந்து இறங்கி சுற்றுலா பயணி இயற்கை ரசித்துக் கொண்டே புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

அடிப்படை வசதிகள்

கொடைக்கானலில் உள்ளஅனைத்து சுற்றுலா இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது. கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்களிலும் முக்கிய சாலை சந்திப்புகளிலும் அவ்வப்போது போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக இதமான குளிரும் வெயிலும் நிலவி வருகிறது. இரவில் கடும் குளிரும் நிலவி வருகிறது. இந்த இதமான சூழலை சுற்றுலா பயணிகள் ரசித்தபடி சென்று வருகின்றனர்.

கோடை விடுமுறை முன்னிட்டு கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு பேருந்துகள் அனுமதிக்கப்படாத நிலையிலும் வாகன நெரிசல் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. இதை சீர் செய்து நடவடிக்கை எடுக்கவும், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் . கொடைக்கானல் சுற்றுலா இடங்களில் கூடுதல் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.