தமிழ்நாடு

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வத்தின் வீடு
கடலூர் மாவட்டம், பண்ருட்டு அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏவாக இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரில் அடிப்படையில் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

2011-2016ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம் பண்ருட்டு நகராட்சி தலைவராக இருந்தபோது ஒப்பந்தம் விடுவதில் ரூ.20 லட்சம் பண மோசடி ஈடுபட்டதாக பன்னீர்செல்வம் மற்றும் அப்போதைய நகராட்சி ஆணையர் பெருமாள் உள்ளிட்ட 6 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ

இதையடுத்து 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பண்ருட்டி மற்றும் சென்னை உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை நடத்தியது. இதைத்தொடர்ந்து இன்று பண்ருட்டியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் சத்யா பன்னீர்செல்வம் வீட்டின் முன் அவரது ஆதரவாளர்கள் கூடி உள்ளனர். இதன்காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.