விளையாட்டு

Vinesh Phogat: ஒரே இரவில் 1.9 கிலோ எடை குறைத்த வினேஷ் போகத்.. மருத்துவமனையில் அனுமதி!

வினேஷ் போகத் தீவிர உடற்பயிற்சியின் மூலம் ஒரே இரவில் 1.9 எடை குறைத்துள்ளார். முடிவில் ,100 கிராம் எடையை குறைக்க முடியாமல் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இரவு முழுவதும் உடற்பயிற்சி மேற்கொண்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாவும் தகவல்கள் கூறுகின்றன.

Vinesh Phogat: ஒரே இரவில் 1.9 கிலோ எடை குறைத்த வினேஷ் போகத்.. மருத்துவமனையில் அனுமதி!
Vinesh Phogat Admitted To Hospital

பாரீஸ்: பாரீஸ் ஒலிம்பிக் 2024 இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கத்தை வென்றுள்ளது. துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 2 வெண்கல பதக்கத்தை வென்றார். துப்பாக்கி சுடுதலில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவு தகுதிச்சுற்று போட்டியில், இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். 

மேலும் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் பெறும் வாய்ப்பு உருவானது. அந்த நம்பிக்கையை உருவாக்கியவர் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டி நடைபெற்றது. இதில் வினேஷ் போகத் மற்றும் கியூபா நாட்டைச் சேர்ந்த குஸ்மான் லோப்ஸுடன் மோதினர். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய வினேஷ் போகத் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் குஸ்மான் லோப்ஸை வீழ்த்தி அபார வெறி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தார்.

இந்திய நேரப்படி இன்று இரவு 50 கிலோ எடை பிரிவு மல்யுத்த போட்டியில் வினேஷ் போகத் பங்கேற்க இருந்தார். இதனால் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் வெல்லும் வாய்ப்பு இருந்தது. வினேஷ் போகத்தும் பதக்க கனவில் இருந்தார். ஆனால் இந்த கனவுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வேட்டு வைத்தது. அதாவது 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்றுள்ள வினேஷ் போகத்,100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் அவரை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி திடீரென தகுதி நீக்கம் செய்துள்ளது. 

வினேஷ் போகத்100 கிராம் எடை அதிகமாக இருந்ததை உறுதி செய்த இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு, அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது வருத்தம் அளிப்பதாக தெரிவித்து இருந்தது. வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவரால் இறுதிப்போட்டியில் பங்கேற்க முடியாது. இந்நிலையில், வினேஷ் போகத் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது வினேஷ் போகத், இறுதிப்போட்டிக்கு முன்பாக 2 கிலோ எடை குறைந்து இருந்ததை அறிந்து கொண்டார். இதனால் அவர் உணவு உண்ணாமல், இரவு முழுக்க அதிதீவிரமாக உடற்பயிற்சி மேற்கொண்டுள்ளார். தீவிர உடற்பயிற்சியின் மூலம் ஒரே இரவில் 1.9 எடை குறைத்துள்ளார். முடிவில் ,100 கிராம் எடையை குறைக்க முடியாமல் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இரவு முழுவதும் உடற்பயிற்சி மேற்கொண்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாவும் தகவல்கள் கூறுகின்றன.

பதக்க கனவு பறிபோனதால் கடும் சோகத்தில் மூழ்கியுள்ள வினேஷ் போகத்துக்கு நாடு முழுவதும் உள்ள மக்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். ''போராட்டம், அவமானம், காயம் ஆகியவற்றை தாண்டி நீங்கள் அரைஇறுதி போட்டிக்கு முன்னேறியதே நாட்டுக்காக தங்கம் வென்ற மாதிரிதான். இதற்குமேல் நீங்கள் உங்கள் திறமையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை'' என்று நெட்டிசன்கள், பல்வேறு தரப்பினர் கருத்துக்களை கூறி வருகின்றனர்.