2025 சாம்பியன் டிராபி தொடரில், பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய எட்டு அணிகள் பங்கேற்றன. பாகிஸ்தானில் நடைபெற்று வரும் இந்த போட்டியில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற்றது. தொடர்ந்து, இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றதால், இறுதிப்போட்டியும் துபாயில் நேற்று (மார்ச் 9) நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 50 ஓவர்கள் முடிவில் 251 ரன் எடுத்த நிலையில், 252 ரன்களை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியின் வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடி காட்டினர். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா, கில் ஜோடி நியூசிலாந்து வீரர்களின் பந்துவீச்சை நாளாப்பக்கமும் சிதறவிட்டது.
தொடர்ந்து, கேப்டன் ரோகித் சர்மாவுடன் இணைந்து விளையாடிய கில் 50 பந்துகளில் 31 ரன் எடுத்திருந்த நிலையில், சாட்னர் பந்துவீச்சில், கிளென் பிலிப்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். நியூசிலாந்து வீரர்களின் பவுலிங்கில் 3 சிக்சர்களையும், 7 பவுண்டரிகளையும் அடித்து 83 பந்துகளில் 76 ரன்னை இந்தியா குவித்தது. இறுதியில் இந்தியா நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, 2025 சாம்பியன் டிராபி கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில், கோப்பையை வென்ற இந்திய அணிக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு
சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இக்கோப்பையை மூன்று முறை வென்ற ஒரே அணி என்ற பெருமை இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. இந்த வரலாற்றை படைத்ததற்காக, வீரர்கள், நிர்வாகம் மற்றும் பயிற்சியாளர்களுக்கு மிக உயிரிய பாராட்டுகளை பெற தகுதி பெற்றவர்கள். இந்திய கிரிக்கெட்டிற்கு சிறந்த எதிர்காலம் கிடைக்க வாழ்த்துகள்.
பிரதமர் நரேந்திர மோடி
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை இந்தியாவுக்கு கொண்டு வந்த நமது கிரிக்கெட் அணியை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்த தொடர் முழுதும் சிறப்பாக விளையாடிய இந்திய அணிக்கு என் வாழ்த்துகள்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். இந்த வெற்றி வரலாற்றை உருவாக்கி உள்ளது. நமது அனல் பறக்கும் ஆற்றலும், ஆடுகளத்தில் நமது அசைக்க முடியாத ஆதிக்கமும் தேசத்தை பெருமைப்படுத்தியது. இந்த வெற்றி புதிய அளவுகோலை அமைத்துள்ளது.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்
மகத்தான வெற்றி. இந்திய அணி வீரர்கள், கோடிக்கணக்கான மக்களின் மனங்களை வென்றனர். இந்திய அணியின் சிறப்பான ஆட்டம், செயல்திறன் மற்றும் களத்தில் ஆதிக்கம் ஆகியவை ஊக்கமளிப்பதாக இருந்தது. சாம்பியன்களுக்கு வாழ்த்துகள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்தியாவிற்கும் வலுவான போட்டியை கொடுத்த நியூசிலாந்திற்கும் என் வாழ்த்துக்கள். ரோகித் சர்மா மற்றும் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை பெற்றுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்
சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு என் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.