சினிமா

VJ சித்து இயக்கத்தில் டயங்கரம்: வெளியானது அல்டிமேட் ப்ரோமோ!

Vels Film International Limited தயாரிப்பில் VJ சித்து இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு டயங்கரம் என பெயரிடப்பட்டுள்ளது.

VJ சித்து இயக்கத்தில் டயங்கரம்: வெளியானது அல்டிமேட் ப்ரோமோ!
VJ Siddhu new movie titled Dayangaram movie
தமிழ் யூடியூப் வலைத்தளத்தில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் VJ சித்து. இவரும், இவரது குழுவினரும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் கொஞ்சம் நஞ்சமில்லை. கலகலப்பாக இருக்கும் இவரது வீடியோக்கள் பதிவிட்ட சில மணிநேரங்களில் லட்சக்கணக்கான பார்வையாளர்களை தாண்டுகிறது. சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிப்பெற்ற டிராகன் படத்திலும் முக்கியமான ரோலில் நடித்து அசத்தியிருந்தார் VJ சித்து. தற்போது இவர் இயக்குநர் அவதாரம் எடுக்கப்போவதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஐசரி கே கணேஷ் அவரது தயாரிப்பு நிறுவனமான, Vels Film International Limited சார்பில் VJ சித்துவை கதாநாயகனாக வைத்து திரைப்படம் ஒன்றை தயாரிக்க பேச்சுவார்த்தை எழுந்துள்ளது. முதலில் VJ சித்துவுக்காக மற்ற இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்த தயாரிப்புக் குழுவுக்கு எதிலும் திருப்தி வரவில்லை. இறுதியில் VJ சித்துவே ஒரு ஒன்லைன் சொல்ல, தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷுக்கு உடனடியாக பிடித்துவிட்டதாம். நீங்களே படத்தை இயக்கி நடிங்க என நம்பிக்கை கொடுத்துள்ளார் தயாரிப்பாளர்.

இந்நிலையில் நேற்றைய தினம், படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்புக்கான ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டது. வழக்கம் போல சித்துவின் மொட்டைமாடி கேங்க் ப்ரோமோ வீடியோவில் அசத்தினர். விஜே சித்து இயக்கும் முதல் படத்திற்கு, “டயங்கரம்” என பெயரிடப்பட்டுள்ளது. படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், VJ சித்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Vels Film International தொடர்ந்து புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 25-க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ள நிலையில், கோமாளி, மூக்குத்தி அம்மன், வெந்து தணிந்தது காடு போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸீல் ஹிட் அடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.