தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய கடின உழைப்பின் மூலம் தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். இவரின் 25-வது படத்தை ‘சூரரைப் போற்று’ படத்தை இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா இயக்குகிறார்.
இப்படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ‘எஸ் கே 25’ என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படமானது 1965-ஆம் ஆண்டு நடந்த இந்தி திணிப்பை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது. இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடிக்கிறார்.
டான் பிக்சர்ஸ் நிறுவனம் இயக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பூஜையுடன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ‘எஸ் கே 25’ படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்து. அதன்படி, இப்படத்திற்கு ‘பராசக்தி’ என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. 'பெரும் சேனை ஒன்று தேவை’ என சிவகார்த்திகேயன் பேசும் வசனங்கள் இடம்பெற்றுள்ள இப்படத்தின் டைட்டில் தொடர்பான டீசரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
மேலும் படிக்க: 'ஜனநாயகன்’ அவதாரம் எடுத்த விஜய்.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கிய ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கு பல பிரிவுகளில் தேசிய விருது கிடைத்த நிலையில் ‘பராசக்தி’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது.
கடந்த ஆண்டு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான திரைப்படம் ‘அமரன்’. இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக முதல் முறையாக சாய்பல்லவி இணைந்திருந்தார்.
மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உட்பட முக்கிய பிரபலங்கள் பலரும் படக்குழுவை பராட்டினார்கள். ’அமரன்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
#பராசக்தி #Parasakthi
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) January 29, 2025
Tamil title teaser - https://t.co/ne1Vbz7gl3#SK25 pic.twitter.com/OGXc2n5D1z