சினிமா

கண்ணில் தீப்பொறி.. கையில் கத்தி.. மிரள வைக்கும் ‘சர்தார் 2’ போஸ்டர்

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் ‘சர்தார் 2’ திரைப்படத்தின் முதல் தோற்ற (first look) போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

கண்ணில் தீப்பொறி.. கையில் கத்தி.. மிரள வைக்கும் ‘சர்தார் 2’ போஸ்டர்
சர்தார் 2

விஷால் நடித்த 'இரும்புத்திரை' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர்  பி.எஸ்.மித்ரன். தொடர்ந்து, ‘ஹீரோ’, ‘சர்தார்’ போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

கார்த்திக் நடிப்பில் வெளியான ‘சர்தார்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. இதையடுத்து ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தினை பி.எஸ்.மித்ரன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கார்த்திக்,  எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘சர்தார் 2’ திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது. கண்ணில் கொலைவெறியுடன் கையில் கத்தியுடன் கார்த்தி இடம்பெற்றிருக்கும் இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் இதன் டீசர் இன்று பிற்பகல் 12:45 மணிக்கு வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.