சினிமா

Chiranjeevi : டான்ஸ் கிங் அவதாரம்... கின்னஸ் உலக சாதனை படைத்த சிரஞ்சீவி... இப்படியும் ஒரு சம்பவமா?

Chiranjeevi Guinness Word Record : தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி கின்னஸ் சாதனை விருது பெற்று அசத்தியுள்ளார். எதற்காக இந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது என்பது தான் தரமான சம்பவமாக அமைந்துள்ளது.

Chiranjeevi : டான்ஸ் கிங் அவதாரம்... கின்னஸ் உலக சாதனை படைத்த சிரஞ்சீவி... இப்படியும் ஒரு சம்பவமா?
சிரஞ்சீவிக்கு கின்னஸ் உலக சாதனை விருது

Chiranjeevi Guinness Word Record : டோலிவுட் ரசிகர்களால் மெகாஸ்டார் என கொண்டாடப்படும் சிரஞ்சீவிக்கு கின்னஸ் அமைப்பு உலக சாதனைக்கான விருது வழங்கியுள்ளது. 1978ம் ஆண்டு முதல் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கிய சிரஞ்சீவி, இதுவரை 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சிரஞ்சீவியின் மகன் ராம் சரணும் இப்போது டோலிவுட்டின் மாஸ் ஹீரோக்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போல, தெலுங்கில் சிரஞ்சீவியை அம்மாநில ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

சிரஞ்சீவி தற்போது விஸ்வம்பர என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் கின்னஸ் அமைப்பு அவருக்கு விருது வழங்கி சிறப்பித்துள்ளது. இந்த விருதை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கானும், கின்னஸ் உலக சாதனை நடுவர் ரிச்சர்ட் ஸ்டென்னிங்கும் சிரஞ்சீவிக்கு வழங்கினர். அதாவது 156 படங்களில் 537 பாடல்களுக்கு நடனமாடியுள்ள சிரஞ்சீவி, 24,000 ஸ்டெப்ஸ் போட்டுள்ளார். இதற்காக தான் கின்னஸ் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளதாம். 

இதனையடுத்து இந்த விருது குறித்து ட்வீட் செய்துள்ள சிரஞ்சீவி, இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் நடனமும் ஒரு அங்கமாகிவிட்டது. சாவித்திரி போன்ற ஜாம்பவான்கள் முன் நடனமாடியது மட்டுமில்லாமல், சினிமாவில் எனது முதல் டான்ஸ் ஸ்டெப் இன்னும் நினைவில் இருக்கிறது. இந்த அங்கீகாரம் கிடைக்க காரணமாக இருந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், நடன இயக்குநர்களுக்கு மிக்க நன்றி. இந்த விருதுக்கு காரணம் அவர்கள் தான். அவர்களுடன் திரையுலகில் என்னுடன் பயணித்த நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி என சிரஞ்சீவி ட்வீட் செய்துள்ளார். 

சிரஞ்சீவிக்கு உலக சாதனை கின்னஸ் விருது கிடைத்ததற்கு, அவரது மகன் ராம் சரணும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அதேபோல், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்களும் ரசிகர்களும் மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.