ஆன்மிகம்

திருத்தணி, மருதமலை முருகன் கோயிலில் பங்குனி உத்திரம் – குவிந்த பக்தர்கள்

பொது வழியில் மற்றும் 100 ரூபாய் கட்டண வழியில் மூலவரை தரிசிக்க, நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

 திருத்தணி, மருதமலை முருகன் கோயிலில் பங்குனி உத்திரம் – குவிந்த பக்தர்கள்

திருத்தணி, மருதமலை முருகன் கோயிலில் பங்குனி உத்திரம் – குவிந்த பக்தர்கள்


திருத்தணி மற்றும் மருதமலை முருகன் கோயிலில் பங்குனி உத்திரப்பெருவிழாயொட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மயில் காவடிகள் மற்றும் பால்குடம் எடுத்து வந்துமூலவரை வழிபட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திரப்பெருவிழாயொட்டி, அதிகாலை, 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தங்கவேல், தங்ககீரிடம், வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து காலை, 11:00 மணிக்கு நகரத்தார் திருத்தணி பாத யாத்திரை பக்தர்கள், மயில்காவடிகள் எடுத்தும், பெண்கள் பால்குடம் தலையில் சுமந்து, மலையடிவாரத்தில் உள்ள திருக்குளத்தில் இருந்து மலைப்படிகள் வழியாக மலைக்கோவிலுக்கு வந்து. பின் காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு, விபூதி, நாட்டு சர்க்கரை, பஞ்சாமிர்தம் தயிர் தேன் மற்றும் பால்குட அபிஷேகம் நடைபெற்றது.

இரவு, 7:30 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் தங்கத்தேரில் திருவீதியுலா நடைபெற உள்ளது. பங்குனி உத்திரம் என்பதால் மலைக்கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், பொது வழியில் மற்றும் 100 ரூபாய் கட்டண வழியில் மூலவரை தரிசிக்க, நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

இதேபோல் ஏழாம் படை வீடு என கருதப்படும் மருதமலை சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகமானது கடந்த 4ம் தேதி நடைபெற்ற முடிந்தது. அதனைத்தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை தற்போது நடைபெற்று வருகிறது.அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் பங்குனி உத்திர விழாவானது நடைபெற்றது.முன்னதாக காலை முதலே மூலவருக்கு அபிஷேகம் அலங்கார பூஜைகள் நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து உற்சவருக்கு மாலை அலங்காரங்கள் செய்யப்பட்டு சப்பரத்தில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் கோவிலை வலம் வந்தனர்.

முன்னதாக 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறுவதால், நாள்தோறும் மக்களின் கூட்டம் கோவிலுக்கு வந்து கொண்டு இருந்தது, முன்னதாக இருசக்கர வாகனங்கள் மேலே அனுமதிக்கப்படாமல் பொதுமக்களுக்கு கோவிலின் வாகனங்கள் மூலம் மேலே செல்ல அறிவுறுத்தப்பட்டது. எனினும் வரும் கூட்டத்தை ஒழுங்குபடுத்த 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.