ஆன்மிகம்

பெண்களுக்கான ராசிப்பலன்: இந்த ராசியினரிடம் பொறுமை இல்லையென்றால் பிரச்னை தான்!

குமுதம் சிநேகிதி வாசகர்களுக்காக ஜோதிச்சுடர் ந.ஞானரதம் வருகிற ஆகஸ்ட் 08 ஆம் தேதி வரையிலான பெண்களுக்கான பிரத்யேக ராசிபலன்களை துல்லியமாக கணித்து வழங்கியுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு-

பெண்களுக்கான ராசிப்பலன்: இந்த ராசியினரிடம் பொறுமை இல்லையென்றால் பிரச்னை தான்!
horoscope for womens predict by astrologer gnanaratham
மேஷம்:

தம்பதியரிடையே இருந்துவந்த பிணக்குகள் நீங்கி, சந்தோஷமான சூழல் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்கள், தங்கள் நண்பர்களுக்கு உதவிசெய்யும் நிலையில்தான் இருப்பார்கள். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு... குறிப்பாக, ஊறுகாய், மிளகாய்த்தூள், பருப்புப்பொடி ஆகியவை சிறப்பாக விற்பனையாகும். மாணவமணிகள், அதிக மதிப்பெண் பெற, முறையான பயிற்சி தேவை. உடல்நலம் நன்றாக இருக்கும்.

வழிபாடு: செவ்வாயன்று காலபைரவருக்கு ‘விபூதி அபிஷேகம்’ செய்வது, நல்லது.

ரிஷபம்:

குடும்பத்தலைவிகள், அநாவசிய செலவைத் தவிர்க்கவும். வேலைக்குச் செல்லும் பெண்கள், அலுவலகத்திற்கு காலதாமதமாக செல்லும் பழக்கத்தை கைவிடவும். சுயதொழில் செய்யும் பெண்கள், புதிய தொழிலில் நல்ல வருவாயை அள்ளுவார்கள். வாடிக்கையாளர்களிடமும் நற்பெயரைப் பெறுவார்கள். மாணவமணிகள், வகுப்பில் அரட்டையடிக்காமல், பாடத்தில் கவனம் செலுத்தவும். உடல்நலம் முன்னேற்றம் அடையும்.
வழிபாடு: பச்சையம்மனுக்கு ‘குங்கும அபிஷேகம்’ செய்வது, மிகவும் நல்லது.

மிதுனம்:

தங்கள் மகள் / மகனுடைய திருமணத்தைக் கூடுமானவரை தள்ளிப்போட வேண்டாம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு புதிய வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். சுயதொழில் செய்யும் பெண்கள், வாடிக்கையாளர்களிடம் வாக்குவாதத்தைத் தவிர்க்கவும். பொறுமையைக் கையாளவும். மாணவமணிகள், பாடங்களில் சந்தேகங்களை ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவடைவது நல்லது. சிலருக்கு முதுகுவலி வந்துபோகும்.

வழிபாடு: சரபேஸ்வரருக்கு ‘இளநீர் அபிஷேகம்’ செய்வது, வணங்குங்கள்.

கடகம்:

தம்பதியர் தங்களுக்குள் மனம் விட்டுப் பேசி, எந்த முடிவையும் எடுப்பது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்கள், மேலதிகாரிகளிடம் பாராட்டைப் பெறுவர். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். மாணவமணிகள் தங்கள் பெற்றோரின் கஷ்டங்களை உணர்ந்து, கவனச்சிதறல்களைக் கைவிட்டு, படிப்பில் அக்கறைச் செலுத்துவது நல்லது. உடல்நலம் மேம்படும்.
வழிபாடு: வியாழனன்று அரசமரப் பிள்ளையாருக்கு ‘அறுகம்புல்’ சாற்றுங்கள்.

சிம்மம்:

குடும்பத்தலைவிகள் அண்டை வீட்டாரிடம் அனுசரணையாக இருக்கவும். தேவையற்ற வாக்குவாதத்தைத் தவிர்க்கவும். வேலைக்குச் செல்லும் பெண்கள், தங்கள் கடமையை உணர்ந்து நடந்துகொள்வது நல்லது. சுயதொழில் செய்யும் பெண்கள்... குறிப்பாக, ஜவுளி வியாபாரம் செய்பவர்கள், நல்ல லாபத்தைக் காண்பர். மாணவமணிகள், தாங்கள் படித்ததைப் பலமுறை எழுதிப்பார்ப்பது நல்லது. சிலருக்கு ஜலதோஷம் வந்துபோகும்.

வழிபாடு: பிரத்தியங்கிரா தேவிக்கு ‘அரளிப்பூ மாலை’ அணிவித்து, வணங்கவும்.

கன்னி:

தங்கள் நிலையைப் புரிந்துகொண்டு நாத்தனார் உதவுவார். தம்பதியரிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். வேலைக்குச் செல்லும் பெண்கள், அலுவலகத்தில் முக்கியக் கோப்புகளைக் கவனமாகக் கையாளவும். சுயதொழில் செய்யும் பெண்கள்.. குறிப்பாக, புடவை மற்றும் உணவுத்தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். மாணவமணிகள் நடனம் மற்றும் இசைப்பயிற்சி எடுத்துக்கொள்வர். உடல்நலத்தில் கவனம் தேவை.

வழிபாடு: சனிக்கிழமையன்று கிருஷ்ணருக்கு ‘வெண்ணெய்’ படைத்து, வழிபடுங்கள்.

துலாம்:

குடும்பத்தலைவிகள் கையில் பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். தம்பதியரிடையே அன்பு அதிகரிக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு வங்கிக்கடன் கிடைக்கும். மாணவமணிகள், தேர்வுகளில் நல்ல மதிப்பெண் எடுத்து, ஆசிரியருக்கும் பள்ளிக்கும் நற்பெயர் வாங்கித் தருவார்கள். உடல்நலம் சீராக இருக்கும்.

வழிபாடு: புதனன்று வராஹி அம்மனுக்கு ‘எலுமிச்சை மாலை’ அணிவிக்கவும்.

விருச்சிகம்:

கணவர் வீட்டாரின் அன்பைப் பெறுவீர்கள். தங்கள் கணவரும் தங்கள்மீது அளவுகடந்த அன்பு செலுத்துவார். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இது முன்னேற்றமான காலகட்டம். பணவரவுக்குப் பஞ்சமில்லை. சுயதொழில் செய்பவர்களுக்கு இரட்டை லாபம் கிடைக்கும். பணியாள்களும் நேர்மையாக நடந்துகொள்வார்கள். மாணவமணிகள், சுறுசுறுப்பாகப் படித்து, நல்ல மதிப்பெண் பெறுவார்கள். உடல்நலம் மேம்படும்.

வழிபாடு: புதனன்று பச்சையம்மனுக்கு ‘சர்க்கரைப்பொங்கல்’ படைக்கவும்.

தனுசு:

தம்பதியரிடையே அன்பு மேலோங்கும். வேலைக்குச் செல்லும் பெண்களில் சிலருக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு கிடைக்கும். சுயதொழில் செய்யும் பெண்கள், தங்கள் வீட்டைப் புதுப்பிப்பார்கள். தவிர, பல கிளைகளையும் துவங்கத் திட்டமிடுவார்கள். மாணவமணிகளுக்கு படிப்பிலும் விளையாட்டிலும் ஆர்வம் அதிகரிக்கும். சிலருக்கு கால்சியம் பற்றாக்குறை ஏற்படலாம்; தகுந்த மருத்துவரிடம் ஆலோசனைப் பெறவும்.

வழிபாடு: செவ்வாயன்று முருகனுக்கு ‘சிவப்புநிற மலர் மாலை’ சாற்றுங்கள்.

மகரம்:

குடும்பத்தலைவிகளுக்கு முக்கியமான முடிவுகள் எடுக்க, முழு சுதந்திரம் கிடைக்கும். மாமியார் மெச்சும் மருமகளாக பெயர் எடுப்பார்கள். வேலைக்குச் செல்லும் பெண்கள், வாகனத்தை இயக்கும்போது, அதிக வேகத்தைத் தவிர்க்கவும். சுயதொழில் செய்யும் பெண்கள், தொழிலை விரிவுசெய்ய, வங்கிக்கடன் பெறுவார்கள். மாணவமணிகளுக்கு ஸ்காலர்ஷிப் கிடைத்து, தேவைகள் பூர்த்தியாகும். உடல்நலம் முன்னேற்றமடையும்.

வழிபாடு: வெள்ளியன்று ராகுகாலத்தில் துர்க்கைக்கு ‘எலுமிச்சை விளக்கு’ ஏற்றவும்.

கும்பம்:

தம்பதியரிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். விட்டுக்கொடுப்பது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வேலைப்பளு குறையும். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு, உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகள் செய்து மகிழ்வார்கள். வியாபாரமும் சிறப்பாக நடைபெறும். மாணவமணிகள் சோம்பேறித்தனத்தை அகற்றி, சுறுசுறுப்புடன் படிக்கவும். உடல்நலம் சிறப்படையும்.

வழிபாடு: சனியன்று நரசிம்மருக்கு ‘துளசிமாலை’ அணிவித்து, வழிபடுங்கள்.

மீனம்:

குடும்பத்தலைவிகள் விருந்து, விழாக்களில் கலந்துகொள்வார்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வெளிநாட்டுச் செய்தி மகிழ்ச்சி தரும். பழைய நண்பர்களிடம் பணம் கொடுக்கல் & வாங்கலில் எச்சரிக்கையுடன் இருக்கவும். சுயதொழில் செய்யும் பெண்களுக்குப் பணவரவில் பிரச்னை இல்லை. மாணவமணிகள் ஞாபக மறதி நீங்க, பலமுறை படிப்பது நன்மை தரும். உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் வரலாம்.

வழிபாடு: ஞாயிறன்று ராகுகாலத்தில் சிவபெருமானுக்கு ‘பாலபிஷேகம்’ செய்யுங்கள்.