TVK Vijay: தவெக முதல் மாநாடு... நிர்வாகிகளுக்கு குட் நியூஸ்... விஜய்யின் அடுத்த அறிக்கை ரெடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு குறித்து, அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை (செப்.12) அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sep 11, 2024 - 21:48
 0
TVK Vijay: தவெக முதல் மாநாடு... நிர்வாகிகளுக்கு குட் நியூஸ்... விஜய்யின் அடுத்த அறிக்கை ரெடி!
தவெக மாநாடு அப்டேட்

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய், அதன் முதல் மாநாடு நடத்துவதில் தீவிரமாக உள்ளார். கோலிவுட்டில் முன்னணி ஹீரோவான விஜய், சினிமாவில் இருந்து விலகி அரசியலில் களமிறங்கவுள்ளதாக அறிவித்துவிட்டார். இதனையடுத்து தனது கட்சியான தவெக-வின் கொடியையும் சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். வரும் 23ம் தேதி நடைபெறவுள்ள இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  

ஆனால், தவெக மாநாட்டுக்கான அனுமதி இன்னும் கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது. மாநாட்டுக்கு அனுமதி கோரி விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு வழங்கியிருந்தார். இதனையடுத்து மாநாடு நடைபெறவுள்ள திடலை காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும், தவெக மாநாடு குறித்து காவல்துறை சார்பில் 21 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், அதற்கு பதில்கள் சொன்ன பிறகு, 33 நிபந்தனைகளுடன் அனுமதி கொடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.  

இருப்பினும் இதுவரை தவெக மாநாடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. கடந்த 8ம் தேதி தவெக தலைவர் விஜய் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில் தமிழக வெற்றிக் கழகத்தை தேர்தல் ஆணையம் அரசியல் கட்சியாக அங்கீகரித்துள்ளதாக விஜய் தெரிவித்திருந்தார். மேலும், தவெக கொள்கைப் பிரகடன முதல் மாநில மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருங்கள். எனவும் குறிப்பிட்டிருந்தார். 

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை கொண்டாடும்விதமாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கிய தவெக நிர்வாகிகள், மாநாடு குறித்த அறிவிப்பு வரவில்லையே என ஏமாற்றத்தில் இருந்தனர். இந்நிலையில், நாளை (செப்.11) காலை 11 மணிக்கு தவெக மாநாடு குறித்து விஜய் அறிக்கை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக நிர்வாகிகளுக்கான அறிக்கையாக வெளியாகும் இதில், மாநாடு குறித்து சில முக்கியமான அறிவிப்புகள் இருக்கும் என சொல்லப்படுகிறது. இன்னும் இரு வாரங்களே உள்ளதால், தவெக மாநாடு பற்றிய முக்கியமான அப்டேட்டை விஜய் வெயிடவுள்ளாராம்.

அதேநேரம் தவெக மாநாடு வரும் 23ம் தேதி தன் நடக்கிறதா அல்லது வேறொரு தேதிக்கு மாற்றப்படுகிறதா என்ற குழப்பமும் காணப்படுகிறது. ஒருவேளை மாநாட்டுக்கான அனுமதி கிடைக்கவில்லை என்றால், இன்னொரு தேதிக்கு மாற்றப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow