K U M U D A M   N E W S

postagestamps

தமிழ்நாட்டைச் சுற்றிப் பார்க்க புது Passport! தபால் துறையின் சூப்பர் திட்டம்... என்ன ஸ்பெஷல்?

சுற்றுலா செல்ல வேண்டும் என்றால் உடனே கூகுள் மேப்பைத் திறந்து, எங்கே செல்லலாம் என்று தேடுகிற காலம் இது. ஆனால், ஒரு பயணத்துக்கு அர்த்தமும், நினைவுகளுக்கு நிரந்தர அடையாளமும் கிடைத்தால் எப்படி இருக்கும்? அப்படியொரு வித்தியாசமான அனுபவத்தை வழங்குகிறது இந்திய அஞ்சல் துறையின் ‘ஃபிலாட்டலி பாஸ்போர்ட்’ (Philately Passport)!