கோவை ரயில் நிலையத்தில், ரயில்வே காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்ட போது, 62 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 5 பெண்கள் உட்பட 6 பேர் கைதாகியுள்ளனர்.
கும்பகோணம் ரயில் நிலையம் 100 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் முற்றிலும் புனரமைக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் ஆர்.என்.சிங் இன்று (மார்ச்.21) கும்பகோணத்தில் ரயில் நிலையத்தை ஆய்வு செய்தவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
பல ரயில் நிலையங்களில், நுழைவு பாதையினை தவிர்த்து சில குறுக்கு வழிகளிலும் ரயில் நிலையத்திற்குள் பயணிகள் வருகைத் தருகின்றனர். இதனை முறையாக கண்டறிந்து அனைத்து குறுக்குப்பாதைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓடும் ரயிலில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் ஆறு லட்சம் நகைகள் அடங்கிய கைப்பையை திருடிய காவலரை கைது செய்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரயில் நிலையங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இரண்டாயிரத்து 300 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் பயணிகளின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
Chromepet Railway Tunnel : குரோம்பேட்டை ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் 15 ஆண்டுகள் ஆகியும் இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு வராததை கண்டித்து குடியிருப்போர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.
ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை, 120-ல் இருந்து 60 நாட்களாக குறைத்து ஐஆர்சிடிசி அறிவித்திருந்தது. இந்த புதிய விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
IRCTC Ticket Booking Period Days Update News : ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை, 120 நாட்களில் இருந்து குறைத்து ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.
கவரைப்பேட்டையில் நிகழ்ந்த ரயில் விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இந்தாண்டு தொடக்கம் முதல் தற்போது வரை அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் ரயில் விபத்துகள் பயணிகளை கவலையடைய செய்துள்ளது.
ரயில் விபத்து ஏற்பட்ட கவரைப்பேட்டை மார்க்கத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது. விபத்து ஏற்பட்ட இடத்தில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டது.
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று துவங்கிய நிலையில், 5 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டது.
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று துவங்கியதை அடுத்து, சென்னை செண்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் பொதுமக்கள் காலை முதலே அதிகளவில் குவிந்தனர்.
Madurai To Bengaluru Vande Bharat Express Train : பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கிவைக்க உள்ள மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவை. மதுரையில் நடைபெறும் விழாவில் மத்திய ரயில்வே துறை மற்றும் ஜல்சக்தி துறை இணை அமைச்சர் வி.சோமன்னா, அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், எம்.பி. சு.வெங்கடேசன், மேயர் வி.இந்திராணி ஆகியோர் பங்கேற்பு.