K U M U D A M   N E W S

#GetOutStalin VS #GetOutModi புள்ளி வைத்தது யார்? கோலமிட்டுக் கொண்டிருப்பது யார்?

தமிழக அரசியல் களத்தில் தினம் தினம் அரசியல் தலைவர்கள் செய்யும் ஸ்டன்டுகள் டிரெண்டாகிக் கொண்டிருக்கும் நிலையில், மாறி மாறி ஹேஷ்டேக் போட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர் திமுக மற்றும் பாஜகவினர். இந்த ஹேஷ்டேக் சேலஞ்சிற்கு தொடக்கப்புள்ளி எது? இதில் சறுக்கியது யார்? சாதித்தது யார்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

7 மாஜிக்கள்.... 13 மாநில நிர்வாகிகள்...! அதிமுக தலைமையாகும் செங்கோட்டையன்? ஈசிஆர்-ல் நடந்த ரகசிய மீட்டிங்...?

அதிமுகவில் வெடித்துள்ள உட்கட்சி மோதல் காரணமாக, மாஜிக்கள் சிலர் தலைமையின் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில், ஈசிஆர் கெஸ்ட் ஹவுஸில் செங்கோட்டையன் தலைமையில் ரகசிய மீட்டிங் நடந்துள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் அதிமுக தலைமையை ஏகத்துக்கும் டென்ஷனாக்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.

"திமுகவும் பாஜகவும் குழாய் அடி சண்டை போட்டு கொண்டுள்ளனர்" - RB உதயகுமார்

"கல்வி நிதியை வாங்கி தருவதை விடுத்து சண்டையிடுகின்றனர்"

மொழித்திணிப்பை இருமொழி கொள்கையால் வெல்வோம் - எடப்பாடி பழனிசாமி

“எந்த ஒரு மொழியையும் எவராவது நம்மீது திணிக்கத் துணிந்தால் அதனை பகுத்தறிவு வாய்ந்த இருமொழிக் கொள்கையால் வெல்வோம்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் Ponmudi மீது சேறுவீச்சு - BJP பிரமுகர் கைது

பெஞ்சல் புயல் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தபோது அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட சம்பவம்

துணை முதல்வர் நிகழ்ச்சியில் ஒலித்த "Get Out Modi" முழக்கம்

புதிய கல்வி கொள்கை - திமுக, பாஜக இடையே கருத்து மோதல்

சொன்னதை செய்த அண்ணாமலை.. ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்..!

தமிழகத்தில் உள்ள கறைபடிந்த அமைச்சரவையை மக்கள் விரைவில் தோற்கடிப்பார்கள் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டு 'கெட் அவுட் ஸ்டாலின்'  (#GetOutStalin) என்ற ஹேஷ்டேக்கை மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார். தற்போது அந்த ஹேஷ்டேக் டிரெண்ட்டாகி வருகிறது. 

வேலை வாங்கி தருவதாக 50 லட்ச ரூபாய் வரை மோசடி... முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

மத்திய அரசில் வேலை வாங்கி தருவதாக கூறி 50 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த பாஜக நிர்வாகி மற்றும் அவரது மனைவியின் முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"Get Out Modi என கூற உதயநிதிக்கு தைரியம் இருக்கிறதா?" - அண்ணாமலை ஆவேசம்

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லட்டும் பார்க்கலாம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆவேசமாக பேசியுள்ளார்.

"Get Out Modi என கூற உதயநிதிக்கு தைரியம் இருக்கிறதா?"

"உலக தலைவரை மதிக்க தெரியாதவர் உதயநிதி"

விஜய் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளி..? போட்டுடைத்த அண்ணாமலை! த.வெ.க.-வுக்கு புதிய சிக்கல்?

தவெக தலைவர் விஜய் பரந்தூரில் ஒரு சிபிஎஸ்இ பள்ளியை நடத்திவருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார். கையில் பேப்பரை காட்டி, அண்ணாமலை புட்டு புட்டு வைத்த தகவல் என்ன? விஜய் நடத்துவதாக கூறப்படும் பள்ளியின் முழு பின்னணி என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில் ..

”இருக்கு.., ஆனா இல்லை”பேரிடர் நிவாரண நிதி – வெளியான முக்கிய அறிவிப்பு

ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, நாகலாந்து, திரிபுரா மாநிலங்களுக்கு 1,554.99 பேரிடர் நிவாரண நிதி

”அமைச்சராக அன்பில் மகேஷ் தொடர தகுதியில்லை” – அண்ணாமலை காட்டம்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் தொடரத் தகுதியோ, தார்மீக உரிமையோ இல்லை அண்ணாமலை

பேரிடர் நிதி இருக்கு.. ஆனா இல்ல.. தமிழகத்திற்கு ஷாக் கொடுத்த மத்திய அமைச்சர் அமித்ஷா

ஆந்திரா, தெலங்கானா, நாகலாந்து, ஒடிசா, திரிபுரா மாநிலங்களுக்கு ஆயிரத்து 554 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

நாட்டின் 26-வது தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்றுக் கொண்ட ஞானேஷ் குமார்

இந்தியாவின் 26-வது தலைமைத் தேர்தல் ஆணையராக  ஞானேஷ் குமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்திய குடிமகனும் வாக்காளராக மாற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மும்மொழிக்கொள்கை விவகாரம் – மத்திய அமைச்சருக்கு எச்சரிக்கை விடுத்த ஆசிரியர் சங்கங்கள்

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட நிதியை விடுவிக்காத மத்திய அரசுக்கு கண்டனம் - ஆசிரியர் சங்கங்கள்

"இளைஞர்களின் கனவு சிதைந்துபோவதை இனியும் அனுமதிக்க முடியாது" - அண்ணாமலை

காவல் உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் இறுதிப்பட்டியலை வெளியிட அண்ணாமலை வலியுறுத்தல்.

"முதல்வர் அரசியலுக்காக மக்களை தவறான திசையில் திருப்புகிறார்" - எல். முருகன்

தமிழகத்திற்கு பத்தாண்டுகளில் ரூ.11 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.

"சமூக விரோதிகளுக்கு எந்த பயமும் இல்லை" – அண்ணாமலை விமர்சனம்

"சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த சம்பவத்தால் அதிர்ச்சி"

பெண் காவலருக்கு பாலியல் துன்புறுத்தல்: வெற்று விளம்பரங்களில் லயித்துக் கிடக்கும் முதல்வர்- அண்ணாமலை விமர்சனம்

சென்னை பழவந்தாங்கலில் பெண் காவலருக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் வெற்று விளம்பரங்களில் லயித்துக் கிடப்பதாக குற்றம்சாட்டினார். 

30 எம்.எல்.ஏ... 300 ஸ்வீட் பாக்ஸ்..! செங்கோட்டையன் வசமாகும் அதிமுக..? Deadline விதித்த டெல்லி..?

எடப்பாடியார் மீதான அதிருப்தியை வெளிப்படுத்த தொடங்கிவிட்ட செங்கோட்டையன், கட்சியைப் பிளவுப்படுத்தும் வேலைகளில் இறங்கிவிட்டதாக வெளியாகி இருக்கும் தகவல் எம்.ஜி.ஆர் மாளிகையை ஆட்டம் காண வைத்துள்ளது. அப்படி செங்கோட்டையன் போட்டுள்ள பிளான் என்ன? அதிமுகவிற்கு கிளைமாக்ஸை எழுதுகிறார் செங்கோட்டையன்? என்பன குறித்து விரிவாக பார்க்கலாம்.

முற்றிலும் Unsafe Model அரசை நடத்தும் மு.க.ஸ்டாலின்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

எந்த தவறு குறித்து புகார் அளித்தாலும், புகார் அளிப்பவர்கள் மிரட்டப்படுவதும் , கொல்லப்படுவதும் என மக்களுக்கு முற்றிலும் Unsafe Model அரசை திமுக நடத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

தினமும் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்கும் முதல்வருக்கு கூச்சமில்லையா? அண்ணாமலை ஆதங்கம்

துருப்பிடித்த இரும்புக்கையை வைத்துக் கொண்டு, தன்னைத்தானே புகழ்ந்து தினமும் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்க, முதலமைச்சர்  மு.க.ஸ்டாலினுக்குக் கூச்சமில்லையா? என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

'அப்பா' என்னும் சொல் பொறுப்புகளை கூட்டியிருக்கிறது.. டப்பிங் வாய்ஸ் பழனிசாமி! மு.க.ஸ்டாலின் விமர்சனம்

’அப்பா’ என்னும் சொல் பொறுப்புகளை கூட்டியிருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குரலே, பாஜக-விற்கான டப்பிங் குரல்தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"2026-ல் சிறுபான்மையினரே திமுக ஆட்சியை தூக்கி எறிவார்கள்" 

"2026ல் தமிழகத்தில் ஒரு மாற்றம் வரும்"