கெஜ்ரிவால் கார் மீது தாக்குதல்
டெல்லியில் தேர்தல் பிரசாரத்தின் போது, முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது தாக்குதல்.
டெல்லியில் தேர்தல் பிரசாரத்தின் போது, முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது தாக்குதல்.
புது டெல்லி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது பாஜக கல்வீச்சு தாக்குதல் நடத்திய ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, அண்ணாமலை குறித்து எழுதியதாக பரவி வரும் கடிதம் போலியானது என்பது குறித்து பாஜக ஐடி விங் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக மாநில நிர்வாகி எம்.எஸ்.ஷா கைதான நிலையில் இத்தகைய பாலியல் குற்றவாளிகளின் கூடாரத்தை வைத்துக் கொண்டுதான், ’அரசியல் கோமாளி’ அண்ணாமலை நடத்திய சவுக்கடி நாடகத்தை எண்ணி, இப்போது நாட்டு மக்கள் காறி உமிழ்கிறார்கள் என்று அமைச்சர் கீதா ஜீவன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்த அறிவிப்பை அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ளார்.
கோவையில் பாஜக அலுவலகம் மீது ஆதித்தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் மாட்டிறைச்சி வீச முயற்சி.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து பாஜக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பாஜக அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னையில் நடைபெறும் பாஜக ஆலோசனை கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக போட்டியிடுகிறதா என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொங்கல் தொகுப்புடன் இரண்டாயிரம் ரூபாய் வழங்க கோரி பாஜக தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று கூறி சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
பெரியார் பேசியதை எல்லாம் இப்போது பேசினால் அது மக்களுக்கு அருவருப்பை தான் தரும் என்றும், இந்த விஷயத்தில் என்னுடைய ஆதரவு சீமானுக்கு தான் என்றும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சட்டசபை கூட்டத்தொடரில் அதிமுக உறுப்பினர்களை அரசின் நேரலை பக்கத்தில் பதிவு செய்யாததற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக சட்டப்பேரவையில் கொண்டு வந்த தனி தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு தெரிவித்த நிலையில் பாஜக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது.
சட்டப்பேரவைக்கு மூன்றாவது நாளாக, யார் அந்த சார்? என்ற பேட்ஜ் அணிந்து வந்த அதிமுகவினர்.
அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக இளைஞரணியினரை போலீஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சிகளின் குரல் வலைகள் ஏன் நசுக்கப்படுகிறது என்றும் தமிழ்நாட்டில் என்ன ஜனநாயக ஆட்சி நடக்கிறது என்றும் பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
"அண்ணா பல்கலை. பாலியல் குற்றவாளி ஞானசேகரனுக்கும், திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்கள் அன்று"
அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் சபாநாயகருக்கு முதலமைச்சர் வேண்டுகோள்.
அதிமுக, காங்கிரஸ், விசிக, CPM, CPI, பாமக உள்ளிட்ட கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக விவகாரம் விவாதம்.
ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கீதம் தொடர்பாக ஒரு கருத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு பின்னர் நீக்கியுள்ளார் என்றும் அவரின் கருத்தில் தடுமாற்றம் உள்ளது என்றும் சபாநாயகர் அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பான பிரச்சனைக்கு அதிமுக தான் காரணம் என்று சட்டசபை கூட்டத்தொடரில் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டினார்.
சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்த நிலையில் திமுக அரசு சட்டத்தை வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
100 சார் கேள்விகளை அதிமுகவை நோக்கி என்னால் கேட்க முடியும் என்றும் அரசு மீது குற்றச்சாட்டுகளை வைக்கும் போது பொறுப்புகளை உணர்ந்து பேச வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.
பெண்களுக்கு எதிரான ஆட்சி நடத்திய சார்கள் தான் பேட்ச் அணிந்து கொண்டு அமர்திருக்கிறார்கள் என்று அதிமுகவை சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் திமுக ஆர்ப்பாட்டம்.
பேரவை மரபை ஆளுநர் மாற்ற முயற்சிப்பது தவறு - சீமான்