K U M U D A M   N E W S

'மக்கள் எங்கள் பக்கம்.. பாஜகவின் மாயை முறியடிப்பு'.. தேர்தல் வெற்றியால் ராகுல் காந்தி குஷி!

''விவசாயிகள், இளைஞர்கள்,தொழிலாளர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் பணிபுரிபவர்கள் என அனைவரும் பாஜகவின் சர்வாதிகரத்தை ஒழித்து நீதியின் ஆட்சி அமைய வேண்டும் என விரும்புகின்றனர்''

இந்தியா கூட்டணி 'மாஸ்'.. 13 தொகுதிகளில் 10ல் வெற்றி.. பாஜக கோட்டையில் காங்கிரஸ் அபாரம்!

பீகார் மாநிலம் ரூபாலி தொகுதியில் நடந்த தேர்தலில் அனைவரும் அதிசயிக்கும்விதமாக சுயேச்சை வேட்பாளர் சங்கர் சிங் 68,070 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பலம் வாய்ந்த ஐக்கிய ஜனதா தளத்தின் கலாதர் பிரசாத் மண்டல் 59,824 வாக்குகளும், ராஷ்டீரிய ஜனதா தளத்தின் பீமா பாரதி 59,824 வாக்குகளும் பெற்று தோல்வி அடைந்தனர்.

போலீஸ் உருவாக்கிய கதை.. திமுகவால் தீட்டப்பட்ட கதை - ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு

வழக்கு தொடர்பாக பாஜக நிர்வாகிகள் கேசவ வினாயகம், கோவர்தன் உட்பட 15க்கும் மேற்பட்ட நபர்களிடம் சிபிசிஐடி போலீசார் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

கல்லு உடைக்கிறேன் ஜெயிலில.. செல்வபெருந்தகையை கிண்டல் செய்து வீடியோ வெளியிட்ட பாஜக

''கட்சியில் யாரோ ஒருவர் ரவுடி இருக்கலாம். ஆனால் ஒரு கட்சியின் தலைவரே ரவுடியாக இருப்பது இங்குதான்'' என்று தொடங்கும் வீடியோவில் செல்வபெருந்தகை மீதான வழக்குகளை பாஜக பட்டியலிடப்பட்டுள்ளது.

காவல்துறை மீது கோபம் உள்ளது; பழிவாங்க மாட்டோம் - அண்ணாமலை

திமுகவின் கைபாவையாகவே சில காவலர்கள் மாறிவிட்டார்கள். எங்களுக்கு ஆட்சி அதிகாரம் வரும் போது திருத்தம் செய்ய பாப்போம்; பழி வாங்க மாட்டோம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், ஆருத்ரா நிறுவனத்திற்கும் தொடர்பா? - செல்வபெருந்தகை வலியுறுத்தல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கும் ஆரூத்ரா கோல்ட் நிறுவனத்திற்கும் தொடர்பு உள்ளாதா? என்ற கோணத்தில் விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை... திமுக-காங்கிரசுக்கு ஜே.பி.நட்டா கண்டனம்... பரபரப்பு ட்வீட்!

''ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்துக்கும், அவரது கட்சி தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன்''

கள்ளக்குறிச்சி வருவதற்கு ராகுல்காந்திக்கு வழி தெரியவில்லை - எல்.முருகன் தாக்கு

2047ஆம் ஆண்டில் இந்தியாவை உலகத்திற்கு வழிகாட்டவும், வல்லரசாகவும் மாற்ற பிரதமர் மோடி பணியாற்றி வருகிறார். ஏழை, எளிய மக்களின் வளர்ச்சிக்கும், நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் செயல்பட்டு வருகிறார்.

பாஜக மாநில செயற்குழு கூட்டம்: கள்ளக்குறிச்சி முதல் முல்லை பெரியாறு வரை... 7 தீர்மானங்கள் என்னென்ன?

பாஜக செயற்குழு கூட்டத்தில் மக்களவை தேர்தலில் தமிழ்நாடு பாஜக அடைந்த தோல்வி குறித்தும், பாஜகவில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதிய சட்டங்கள் மூலம் அப்பட்டமான இந்தி திணிப்பு... பாஜகவை கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

''அனைத்து மாநிலங்களுக்கும் பொது மொழியான ஆங்கிலத்தில் இருந்த சட்டத்தின் பெயர்களை இந்தியில் மாற்றியிருப்பது அப்பட்டமான இந்தி திணிப்பு. இது பல மொழிகள் - பல கலாச்சாரங்கள் சங்கமித்திற்கும் நமது தேசத்தின் அடிப்படை நீதிக்கும் அரசியலமைப்பு விழுமியங்களுக்கும் எதிரானது''

ரெய்டு பயம்.. அண்ணாமலையுடன் திமுக அமைச்சர்களுக்கு தொடர்பு..பற்ற வைத்த திருச்சி சூர்யா Exclusive

ரெய்டு பயம் காரணமாக திமுக அமைச்சர்கள் பலரும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையுடன் ரகசிய தொடர்பில் இருப்பதாக பாஜகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட திருச்சி சூர்யா கூறியுள்ளார். தமிழக அரசின் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அண்ணாமலையுடன் தொடர்பில் உள்ளதாகவும் கூறியுள்ளார் திருச்சி சூர்யா.