கோடநாடு வழக்கு
இதனைத்தொடர்ந்து மகிளா நீதிமன்றம் மாவட்ட நீதிபதி (பொறுப்பு) செந்தில்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.
அதேபோல் வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையில் சிபிசிஐடி போலீசார் ஆஜராகினர். குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் யாரும் ஆஜராகவில்லை. வழக்கை விசாரித்த நீதிபதி அடுத்த மாதம் 10ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
அடுத்த மாதம் ஒத்திவைப்பு
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான், வழக்கின் விசாரணை தன்மையை நீதிபதி கேட்டறிந்ததாகவும், குற்றம் சாட்டப்பட்டுள்ள எதிர் தரப்பு பிரிவு 310ன் படி கோடநாடு பங்களாவில் ஆய்வு செய்ய வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனு நிலுவையில் உள்ள நிலையில், அரசு தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணையை எதிர் வரும் அக்டோபர் மாதம் 10ஆம் தேதிக்கு வழக்கை நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளாதாக அவர் தெரிவித்தார்.
LIVE 24 X 7









