இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த பிறகு, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விசாவில் வெங்கட் பிரபு வெளியிட்டார். முன்னதாக வெங்கட் பிரபு - விஜய் கூட்டணியில் வெளியான 'தி கோட்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் சிவகார்த்திகேயன் இடம்பெற்றார்.
மேலும், வெங்கட் பிரபு - சிவகார்திகேயன் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தில், இரண்டு கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க கயாடு லோஹர் ஒப்பந்த செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'டிராகன்' படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான கயாடு லோஹர், பல புதிய படங்களில் கமிட்டாகி வருகிறார். குறிப்பாக 'இம்மார்டல்' படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாகவும், நடிகர் சிம்புவின் 49-வது படத்திலும் நடித்து வருகிறார். அதேபோல் நடிகர் தனுஷ் உடன் புதிய படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், நடிகர் அதர்வாவின் 'இதயம் முரளி' படத்தில் நடித்து முடித்து, அதன் ரிலீசுக்காக காத்திருக்கிறார். இதற்கிடையே இவர் சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.
LIVE 24 X 7









