சினிமா

இதயம் முரளி திரைப்படம்...குமுதம் விமர்சனக் குழு

அதர்வாவின் நடிப்பு, இசை, ஒளிப்பதிவு பலமாக இருந்தாலும், பலவீனமான திரைக்கதை மற்றும் நீளும் காதல் காட்சிகளால் 'இதயம் முரளி' கலவையான அனுபவத்தை அளிக்கிறது.

 இதயம் முரளி திரைப்படம்...குமுதம் விமர்சனக் குழு
விடிஞ்சா கல்யாணம் மண்ட பத்தில் பெண் வீட்டார்கள் கூடியிருக்க, மாப்பிள்ளை அதர்வா அமெரிக்காவிலிருந்து வரவேண்டும். திருமணத்துக்கு ஏற்பாடு செய்த அதர்வாவின் மாமா நட்டி டென்ஷனாக இருக்க, டென்ஷனே இல்லாமல் அமெரிக்கா வில் ஃப்ளைட் ஏறுகிறார். அதர்வா.

அவரும் அவரது நண்பர்களும் ஃப்ளைட்டில் பக்கத்து சீட்டில் அமர்ந்திருக்கும் பகத் ஃபாஸிலிடம் அதர்வாவின் சொல்லாத மூன்று காதலைச் சொல்லி அவர் தூக்கத் தைக் கெடுக்க, சென்னை வந்த அவர் செய்யும் சம்பவம்தான் கிளைமாக்ஸ்.

கயாடு லோஹர், பிரீத்தி முகுந்தன், ஜோனிடா, நிஹாரிகா, அஞ்சு குரியன், ஏஞ்சலின் என படத்தில் அழகழகான தேவதைகள் அணிவகுத்துக்கொண்டே இருப்ப தைப் பார்க்கலாம். ரசிக்கலாம்.! இயக்கம் ஆகாஷ் பாஸ்கரன்.

ஒளிப்பதிவு கவிதை; இசை இனிமை; அதர்வா நடிப்பு அருமை! அழகான கயாடு, பிரீத்தி இருவரையும் நடிப்பில் ஏப்பம் விடுகிறார் நிஹாரிகா காதலிக்கும் ஹீரோவுக்கு மூளையும் இல்லை, மூடும் வராது என்பதுபோல் அவரது நண்பர்கள் செய்யும் அலப்பறை சலிப்பு. அது சரி, ஹீரோ காதலிக்கும் பெண்ணுக்கு ஆயிரம் வேலை இருக்கிறது; ஆனால், ஹீரோவுக்கு மட்டும் 'ஐ லவ் யூ' சொல்றதை விட்டால் வேற வேலையே இல்லையா? அதர்வா மீடியா ஜெயன்ட் என்பதெல்லாம் சூப்பர் காமெடி காமெடிதான் படத்தில் வரும் ஒரே சோகம்.

பக்கத்தில் நின்று பானிபூரி சாப்பிடும் காதலியிடம் சொல்லாத காதலை அமெரிக்காவுக்குப் பத்து நண்பர்களோடு போய்த்தான் சொல்வேன் என்று அதர்வா அடம்பிடிப்பதெல்லாம் தயாரிப் பாளருக்கு வந்த சோதனை!

'இதயம் முரளி' -இறுதியில் சுபம்!