Earth 2nd Moon : பூமிக்கு 2 நிலவுகள்... விஞ்ஞானிகள் தெரிவித்த அதிர்ச்சி தகவல்!

Earth 2nd Moon : இன்று (Sep 30) முதல் அடுத்த இரண்டு மாதங்களுக்கு இரவில் 2 நிலவுகள் தெரியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Sep 30, 2024 - 07:07
Sep 30, 2024 - 13:52
 0
Earth 2nd Moon : பூமிக்கு 2 நிலவுகள்... விஞ்ஞானிகள் தெரிவித்த அதிர்ச்சி தகவல்!
பூமிக்கு 2 நிலவுகள்... விஞ்ஞானிகள் தெரிவித்த அதிர்ச்சி தகவல்!

Earth 2nd Moon : இன்று (செப். 30) முதல் அடுத்த இரண்டு மாதங்களுக்கு இரவில் 2 நிலவுகள் தெரியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். அப்படியொரு அதிசயம்தான் தற்போது நிகழ்ந்துள்ளது. பூமியில் இருந்து பார்க்கும்போது நிலவுக்கு மிக அருகே ஒரு சிறிய நிலவு(Earth Mini Moon 2024) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விண்ணில் சுற்றிக் கொண்டு இருக்கும் விண்கல் ஒன்று பூமியின் சுற்றுப்பாதைக்கு அருகில் வரும் போது அதை பூமியின் சுற்றுப் பாதைக்குள் இழுப்பதால் நமக்கு இன்னொரு ஒளியுடன் கூடிய நிலவு போன்ற தோற்றத்தை நாம் பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து கூடுதல் தகவல் தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், “பூமி தனது ஈர்ப்பு விசையால் 2024 PT5 என்ற சிறிய விண்கல்லை தனது சுற்றுப்பாதை அருகே கொண்டு வருகிறது. சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளாக இருக்கின்ற பூமியின் முதன்மை துணைக்கோளான நிலவை போல் அல்லாமல், இந்த “புதிய மினி-நிலா” (விண்கல்) இரண்டு மாதகாலம் நமக்கு ஒரு நிலவுபோலத் தெரியும். பின்னர் நமது பூமிக்குப் பின்னால் உள்ள சிறுகோள் பகுதியில் (பெல்ட்) இருக்கும் தனது இருப்பிடத்துக்கு மீண்டும் திரும்பிவிடும். தன் போக்கில் போய்க்கொண்டிருக்கும் ஒரு கற்கோளத்தை பூமி தனது ஈர்ப்புவிசை வட்டத்திற்குள் கொண்டுவருவதால் இந்த நிகழ்வு ஏற்படுகிறது.

விண்வெளி ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்களின் கருத்துப்படி 2024 PT5 போன்ற ஒரு சிறுகோள் சுமார் மணிக்கு 3,540 கி.மீ என்ற மெதுவான வேகத்தில் நகர்ந்தால், பூமியின் ஈர்ப்புப் புலம் அதன் மீது வலுவான தாக்கத்தைச் செலுத்தும். அதன் விளைவாகத் தற்காலிகமாக பூமியால் ஈர்க்கப்பட்டு, பூமியின் சுற்றுப்பாதையில் இருக்கும். ‘‘மினி-மூன் நிகழ்வுகள்” என்று அழைக்கப்படும் ஆய்வில் இந்தச் சிறுகோள் முதன்முதலில் ஆகஸ்ட் 7ம் தேதி நாசாவின் ‘ஆஸ்டிராய்டு டெரஸ்ட்ரியல்-இம்பாக்ட் லாஸ்ட் அலர்ட் சிஸ்டம்’ (ATLAS) மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த 2ம் நிலா மிகவும் சிறியதாகவும், மங்கலாகவும் இருக்கும் என்பதால், வெறும் கண்களால் அதனைத் தெளிவாகப் பார்க்க முடியாது. ஒரு நல்ல தொலைநோக்கி இருந்தால் இந்தச் சிறிய நிலாவைத் தெளிவாக கண்டு ரசிக்க முடியும். 2024 PT5 விண்கல் தோராயமாக 32 அடி (10மீ) நீளம் கொண்டது. இது நமது நிலவுடன் ஒப்பிடுகையில் மிகவும் சிறியது. (நிலவின் சுற்றளவு 10,921 கிமீ).

மேலும் படிக்க: தாயுமானவர் ஸ்டாலின்... அன்பை பெற இயலுமோ? அமைச்சர் செந்தில் பாலாஜி உருக்கம்!

பூமிக்கு அருகே இந்த சிறிய நிலவுகள் வருவது இதுஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பாக 1981 மற்றும் 2022ம் ஆண்டுகளில் தெரிந்திருக்கிறது. இந்த சிறுகோளின் கண்டுபிடிப்பு, நமது சூரியக் குடும்பத்தில் நாம் கண்டுபிடிக்காதது இன்னும் எவ்வளவு இருக்கிறது என்பதனைக் காட்டுகிறது” எனக் கூறியுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow