நூல் வெளியீட்டு விழா.. விஜய் பங்கேற்பதால் நிகழ்ச்சியை புறக்கணித்த திருமாவளவன்

எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூலை தவெக தலைவர் விஜய் வெளியிடவுள்ள நிலையில் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் புறக்கணித்துள்ளார்

Dec 1, 2024 - 02:34
Dec 1, 2024 - 04:18
 0
நூல் வெளியீட்டு விழா.. விஜய் பங்கேற்பதால் நிகழ்ச்சியை புறக்கணித்த திருமாவளவன்
நூல் வெளியீட்டு விழா.. விஜய் பங்கேற்பதால் நிகழ்ச்சியை புறக்கணித்த திருமாவளவன்

தமிழ்  திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் 'தமிழக வெற்றி கழகம்' என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இக்கட்சியின் தொண்டர்கள்  2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை மும்முரமாக செய்து வருகின்றனர். 

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரும், வாய்ஸ் ஆஃப் காமென் எனும் அமைப்பின் நிறுவனருமான  ஆதவ் அர்ஜுனா என்பவர், "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் " எனும் நூலைத் தொகுத்திருக்கிறார். 

அம்பேத்கர் பற்றி பலர் எழுதிய கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளது. இந்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் வரும் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தொடர்ந்து தவெக தலைவர் விஜய் இந்த நூலை வெளியிட  விசிக தலைவர் திருமாவளவன் இதன் முதல் பாதிப்பை பெற்றுக்கொள்வார் என்று கூறப்பட்டது. 

ஆனால், தற்போது திருமாவளவன்  நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த நூலின் முதல் பதிப்பை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக் கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அழைப்பிதழ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது, 2026 சட்டசபை தேர்தலில் திமுக -தவெக இடையே தான் கடும் போட்டி நிலவும் என்று அரசியல் வட்டாரத்தில் கருத்து பரவி வருகிறது. அதுமட்டுமல்லாமல், திமுக -தவெக தொண்டர்கள் இடையே  சமூக வலைதளத்தில் அவ்வப்போது மோதல்களும் ஏற்பட்டு வருகிறது. 

இந்நிலையில், திமுக கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தை கட்சிகள் தலைவர் திருமாவளவன் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளவிருந்தது சர்சையே ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, திருமாவளவன் இந்நிகழ்ச்சியை தவிர்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow