K U M U D A M   N E W S

Author : Vasuki

10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்

கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அந்தோனியார் தேவாலய திருவிழா... களைக்கட்டும் ஜல்லிக்கட்டு..!

அரியலூர் புனித அந்தோனியார் தேவாலய பொங்கல் திருவிழாவை முன்னிட்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டி சிங்கராயபுரம் கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இதில், 700 மாடுகள் 400 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர்.

விமர்சனங்கள் என்ற பெயரில் எவ்வளவோ எலிகள் வருகிறது.. விஜயை மறைமுகமாக சாடிய வடிவேலு..!

விமர்சனங்கள் என்ற பெயரில் எவ்வளவோ எலிகள் வருகிறது அவற்றையெல்லாம் சிக்ஸர்கள் அடிப்பது போல முதல்வர் அடிப்பதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை மறைமுகமாக சாடிய வடிவேலு, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதியை தொடர்ந்து  முதல்வரின் பேரன்  இன்பநிதியும் மக்களுக்கு நிறைய செய்ய உள்ளார் என இன்பநிதியை அரசியலுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.

மாசி மாத அமாவாசை மயான கொள்ளை நிகழ்ச்சி..பக்தர்கள் சாமி தரிசனம்..!

தமிழகத்தில் உள்ள பல்வேறு அங்காளம்மன் கோயில்களில் மயான கொள்ளை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.  இந்த திருவிழாவில் ஏராளமான பக்தகர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு செய்தனர்.

மூக்கை நுழைத்த Mrs. மாண்புமிகு? மூடி மறைக்கும் 2 சீனியர்கள்? கடும் அப்செட்டில் தலைமை?

2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுகவில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்க, சீனியர் மாண்புமிகுகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரால் தலைமை கடும் அப்செட்டாகியுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

சாம்பியன்ஸ் டிராபி தொடர்: மோசமான சாதனை படைத்த நடப்பு சாம்பியன் பாகிஸ்தான்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரு வெற்றியைக் கூட பெறாமல், நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் வெளியேறி மோசமான சாதனையை படைத்துள்ளது.

கிரிப்டோ கரன்சி மோசடி - தமன்னா, காஜலை விசாரிக்க முடிவு?

கிரிப்டோ கரன்சி மோசடி தொடர்பாக பிரபல நடிகைகள் தமன்னா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோரை புதுச்சேரி போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்

மழையால் காப்பாற்றப்பட்ட மானம்.. Pakistan-க்கு இப்படி ஒரு நிலையா

9-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் vs வங்கதேசம் மோதவிருந்தன

Aadhav Arjuna Wife Statement: ஆதவ் அர்ஜுனாவின் மனைவி பரபரப்பு அறிக்கை

"ஆதவ் அர்ஜுனாவும், நானும் எங்களது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையை தனித்தனியாக வைத்திருப்போம்"

சீமான் வீட்டின் காவலாளி கைது - தவெக கண்டனம்

சீமான் வீட்டில் இல்லாத போது, சீருடை இல்லாத காவலர்கள் அவரது வீட்டிற்கு வந்து அத்துமீறல் -தவெக

நேரில் சந்திக்கலாமா? - சீமானுக்கு நடிகை சவால்

சீமானை நேரில் சந்திக்க காத்திருப்பதாகவும், நேரில் சந்திக்கும்போது சில கேள்விகளை கேட்க தயாராக இருப்பதாகவும் நடிகை வீடியோ வெளியீடு,

இந்தி திணிப்பால் மொழி அழியும்” - முதலமைச்சர்

இந்தியால் தமிழ் அழியாது, ஆனால் தமிழ் பண்பாடு அழியலாம் என அன்றே பெரியார் எச்சரித்துள்ளார் -முதலமைச்சர்

செட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியாகாததால் தேர்வர்கள் குழப்பம்..!

செட் தேர்வு ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்படும் என்று அறிவித்த நிலையில் இதுவரை எந்த தகவலும் இல்லாததால் தேர்வர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

Bad girl திரைப்பட சர்ச்சை... தணிக்கை சான்றிதழ் விண்ணப்பம் வரவில்லை..!

Bad girl திரைப்படத்திற்கு தணிக்கை சான்று கேட்டு, இது வரை எந்த விண்ணப்பமும் வரவில்லை என மத்திய அரசின் சென்சார் போர்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. கைதான நாகேந்திரனை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற நீதிமன்றம் மறுப்பு..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நாகேந்திரனை, சிகிச்சைக்காக  சென்னை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது

வீட்டை விட்டு வெளியேறும் ஷாருக்...! பாலிவுட் பாட்ஷாவுக்கே இந்த நிலையா?

பாலிவுட் பாட்ஷா என ரசிகர்களால் கொண்டாடப்படும் ஷாருக்கான், அவர் ஆசை ஆசையாக வாங்கிய மன்னட் இல்லத்தில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளாராம். 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் அரண்மனையை போல பிரம்மாண்டமாக இருக்கும் மன்னட் இல்லத்தில் இருந்து ஷாருக்கான் வெளியேற என்ன காரணம்..? இப்போது பார்க்கலாம்....

பணத்திற்காக விருந்தாக்கப்பட்ட மகள்கள் ..கொடூரத் தாயின் அதிர்ச்சி செயல்.. கணவரின் புகாரில் மனைவி உட்பட இளைஞர்கள் கைது

சென்னையில் பணத்துக்காக இரு மகள்களையும் இளைஞர்களுக்கு விருந்தாக்கி இருக்கிறார் தாய் ஒருவர். சொகுசு வாழ்க்கைக்காக மகள்களின் கற்பை விற்ற கொடூரத் தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. என்ன நடந்தது பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்....

அரசு பள்ளி கழிவறையில் சக மாணவனை கொலை செய்த மாணவன் கைது..!

ராசிபுரத்தில் 9ம் வகுப்பு மாணவனை அடித்துக் கொன்ற சக மாணவனை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கட்டுப்பாடுகளை மீறினால் கைது சீமானுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..!

காவல்துறை சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என சீமானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நாளை நடைபெறவிருந்த போரட்டத்திற்கு அனுமதி மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்காட்டில் மாசி மாத அமாவாசையொட்டி மயான கொள்ளை திருவிழா..!

கோழி ஆடு கடித்து ஆக்ரோஷமாக சாமி சிலைகளுக்கு முன்னால் பக்தர்கள் காளி, சிவபெருமான், அங்காளம்மன் போன்று பல்வேறு வேடமிட்டு ஆடியவாறு மயான கொள்ளை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

கடை வாடைகையை 5 ஆம் தேதிக்குள் கட்ட தவறினால் 12% அபராதம் - சென்னை மாநகராட்சி

வணிக வளாக கடைகளுக்கான மாத வாடகை ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதிக்குள் செலுத்த தறினால் 12% அபராதம் என்று சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.

வீரப்பன் உறவினர் மரணம்.. இழப்பீடு வழங்க மறுத்த உயர்நீதிமன்றம்..!

சந்தன கடத்தல் வீரப்பனின் உறவினர் அர்ஜூனன் காவல்துறையினர் சித்ரவதை காரணமாக தான் இறந்தார் என்பதற்கு எந்த ஆதாரங்கள் இல்லாத நிலையில் இழப்பீடு கோரிய மனுவை பரிசீலுக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.