K U M U D A M   N E W S

Author : Jagan

ரூ.68,773 கோடி திட்டம், 1,06,800 பேருக்கு வேலை வாய்ப்புகள்.. உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடக்கம்

ரூ.68,773 கோடி ரூபாய்க்கான திட்டத்தின் மூலம், 1,06,800 பேருக்கான உறுதி செய்யப்பட்ட வேலை வாய்ப்புகள் உண்டாகியுள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

எஸ்.பி. வருண்குமார் மீது சாதி ரீதியான அவதூறு கருத்து.. சீமானுக்கு 2ஆவது வக்கீல் நோட்டீஸ்

சாதி ரீதியாக அவதூறு பரப்பியதாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, திருச்சி எஸ்.பி.அருண்குமார் இரண்டாவது வக்கீல் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரவுடி சம்போ செந்தில் கூட்டாளி மொட்டை கிருஷ்ணனுக்கு லுக் அவுட் நோட்டீஸ்?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்தில் கூட்டாளியான தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனுக்கு, போலீஸார் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

‘வன்மத்திற்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தால் காலியாகி விடுவோம்’ - இயக்குநர் பா.ரஞ்சித்

சிலசமயம் நம் மீது வன்மம் வரத்தான் செய்யும். ஆனால், அதற்கு பதில் சொல்லும் இடத்தில் நின்றுவிட்டால் நாம் காலியாகிவிடுவோம் என்று தங்கலான் திரைப்படத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை வழக்கு - கேள்விகளால் துளைத்த நீதிபதிகள்

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

ரவுடி சம்போ செந்தில் கூட்டாளிக்கு இயக்குனர் நெல்சனின் மனைவி அடைக்கலம்? - போலீசார் விசாரணை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்தில் கூட்டாளிக்கு, பிரபல சினிமா இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷா அடைக்கலம் கொடுத்தாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

‘இதற்கு மேல் அவகாசம் வழங்க முடியாது' - செந்தில்பாலாஜி வழக்கில் நீதிபதிகள் திட்டவட்டம்

செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், அவகாசம் கோரிய மத்திய அரசிடம், இதற்கு மேல் அவகாசம் வழங்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு, உதவி ஆய்வாளர் படுகொலை.. இரண்டையும் நடத்தியது ஒரே கும்பலா?

களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் கைதானவர்களும், பெங்களூரு ராமேஸ்வரம் உணவக குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்களும் ஒரே கும்பலைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தேவநாதன் வங்கிக் கணக்குகள் முடக்கம்.. நிதி மோசடி வழக்கில் அதிரடி நடவடிக்கை

நிதி நிறுவன மோசடி தொடர்பாக தேவநாதன் பெயரில் உள்ள 5 வங்கிக் கணக்குகள் மற்றும் நிதி நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும்.. போரை நிறுத்துங்கள்... இஸ்ரேலுக்கு ஐ.நா. கோரிக்கை

பாலஸ்தீன குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போடுவதற்காக காசாவில் போரை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

25 இடங்களில் காயம்.. கழுத்தை நெரித்ததால் மூச்சு திணறல்.. பெண் மருத்துவரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி

பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்ட பயிற்சி மருத்துவரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் 25 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல்.. சட்டவிரோத பணபரிமாற்றம்.. தீவிரம் காட்டும் அமலாக்கத்துறை

ஜாபர் சாதிக் தொடர்பான மும்பை போதை பொருள் வழக்கையும், சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் சேர்த்துள்ள அமலாக்கத் துறை விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.

இபிஎஸ் கிணற்றுத் தவளை.. ஜாதிய வன்மத்துடன் பேசி வருகிறார்.. அண்ணாமலை காட்டம்

எடப்பாடி பழனிசாமி மனதில் அவ்வளவு ஜாதிய வன்மம் உள்ளது என்றும் முதலமைச்சராக இருந்த ஒருவர் இவ்வாறு பேச முடியுமா? என்றும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

உதயநிதியை முதலமைச்சராக நியமிக்க வழக்கு வரக்கூடாது.. இதுதான் ஸ்டாலின் பிளான்.. ஆர்.பி.உதயகுமார்

உதயநிதியை முதலமைச்சராக ஆக்குவதற்கு எந்த எதிர்ப்பும், வழக்கும் வந்து விடக்கூடாது என்பதற்காக தான், ராஜ்நாத் சிங்கை திமுக அழைத்து வந்தது என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

கட்சிக் கொடி அறிமுகம், பிரேமலதாவுடன் சந்திப்பு.. ஸ்பீடு மோடில் விஜய்.. குதூகலிக்கும் ரசிகர்கள்..

நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.

காதலர்களை மிரட்டி கூகுள்-பே மூலம் பணம் பறித்த கும்பல்.. போலீஸார் அதிரடி நடவடிக்கை

காதலர்களை மிரட்டி கூகுள்-பே மூலம் பணம் பறித்த கும்பலைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் செய்தனர்.

விஜய்யை மாட்டிவிட தான் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது - ராஜன் செல்லப்பா பரபரப்பு பேச்சு

நடிகர் விஜய்யை வருமான வரித்துறை சோதனையில் மாட்டி விடுவதற்காக தான் பிஜேபியுடன் திமுக கூட்டணி சேர்ந்திருக்கிறது என்று எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.

ஏழை சிறுவனின் தாளா சுமையும், மரணமும்.. ‘வாழை’ திரைப்பட ட்ரெய்லர்..

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள வாழை திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

10 வருடங்கள் தீர்க்கப்படாத கணக்கு.. சூப்பர் ஸ்டார்களுடன் மோதுவது சவால் தான் - ஆஸி. வீரர்

இந்திய அணியிடன் 10 வருடங்களாக தீர்க்கப்படாத கணக்கு உள்ளதாக, சூப்பர் ஸ்டார்கள் நிறைந்த அணியுடன் மோதுவது சவாலன விஷயம்தான் என்றும் ஆஸ்திரேலியா அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் தெரிவித்துள்ளார்.

சுரேஷ் கோபி பீதியை கிளப்புகிறார்.. அரைவேக்காட்டுத்தனமாக பேசக் கூடாது - செல்வப்பெருந்தகை கண்டனம்

மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியிருக்கிறார் என்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பை படிக்காமல் அரைவேக்காட்டுத்தனமாக கூறியிருக்கிறார் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

ஆற்காடு சுரேஷ் மனைவி கைது.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எகிரும் பரபரப்பு..

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை செம்பியம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

100 ரூபாய் நாணயம் செல்லாக்காசு.. வேண்டுமானால் குவாட்டர் வழங்கலாம்.. சீமான் காட்டம்

100 ரூபாய் நாணயம் செல்லாக்காசு என்றும் 100 ரூபாய் நாணயத்தை டாஸ்மாக்கில் கொடுத்தால் ஒரு குவாட்டர் வேண்டுமானால் வழங்க சொல்லலாம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

முல்லை பெரியாறு அணை உடைந்தால் யார் பொறுப்பு?.. கேரளாவுக்கு சக்தி இல்லை.. சுரேஷ் கோபி ஆதங்கம்

முல்லை பெரியாறு அணை உடைந்தால் யார் பொறுப்பேற்பது என்றும் இன்னொரு பேரழிவை எதிர்கொள்ளும் சக்தி கேரளாவுக்கு இல்லை என்றும் நடிகரும், மத்திய இணை அமைச்சருமான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பது?.. ‘காந்தாரி’ போலக் கதறுகிறார் - ஆ.ராசா சாடல்

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு சிறப்பிப்பதில் என்ன பிரச்சினை எடப்பாடி பழனிசாமிக்கு என்று திமுக எம்.பி. ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

கட்சியில் இருந்து விலகிய சம்பாய் சோரன்.. அடுத்து பாஜகவில் இணைகிறாரா? காரணம் இதுதான்..

பாஜகவில் இணையப்போவதாக வெளியான தகவலையடுத்து, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியிலிருந்து சம்பாய் சோரன் விலகுவதாக அறிவித்துள்ளத ஜார்க்கண்ட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.