திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் ஆம்ஸ்ட்ராங்கின் உறவினருக்குச் சொந்தமான இடத்தில் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன் அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
சைபர் மோசடி செயலுக்காக கம்போடியோவிற்கு தமிழர்கள் கடத்தப்பட்ட வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 2வது முறையாக முன் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்த மனுவை தள்ளுபடி செய்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"இது பாதுகாப்பானது அல்ல என்று எனக்குத் தெரியும், அது என்னைக் கொல்லப் போகிறது என்று எனக்குத் தெரியும். ஆனாலும், இன்னும் என்னால் நிறுத்த முடியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
பவுடர் உபயோகிப்பதால் மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் சமூக சேவையில் ஈடுபட்டு பல இளம் வழக்கறிஞர்களை உருவாக்கியவர் என்றும் சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை அரசியல் தொடர்பான கொலை இல்லை என்றும் ஆம்ஸ்ட்ராங்கிற்கு கொலை மிரட்டல் இருப்பதாக காவல் துறையினருக்கு எந்தவித தகவலும் வரவில்லை என காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். மேலும், கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பதை கண்டுபிடித்து சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் ஜாதி ரீதியான படுகொலைகளும் தலித் தலைவர்களை குறி வைத்து படுகொலை சம்பவங்களும் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
2047ஆம் ஆண்டில் இந்தியாவை உலகத்திற்கு வழிகாட்டவும், வல்லரசாகவும் மாற்ற பிரதமர் மோடி பணியாற்றி வருகிறார். ஏழை, எளிய மக்களின் வளர்ச்சிக்கும், நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் செயல்பட்டு வருகிறார்.
தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து பிரதமரும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவருமான ரிஷி சுனக் ராஜினாமா செய்துள்ளார். ஸ்டார்மர் புதிய பிரதமராக அடுத்த வாரம் பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இது தொழிலாளர் கட்சிக்கு சிறந்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.