நடிகை செளந்தர்யாவின் மரணம் விபத்தல்ல, அது கொலை என ஆந்திராவில் புகார் அளித்திருப்பது பெரும் புயலை கிளப்பியுள்ளது.
நடிகை செளந்தர்யா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.அப்போது திரையுலகில் முக்கிய கதாநாயகியாக வலம் வந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்.17, 2004ம் ஆண்டு பெங்களூருக்கு தேர்தல் பிரசாரத்திற்காக சென்றபோது விமான விபத்தில் உயிரிழந்தார்.
இவரது இறப்பு தமிழ், தெலுங்கு திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் 22 வருடங்களுக்குப் பிறகு தற்போது நடிகை செளந்தர்யாவின் மரணம் விபத்தல்ல, அது கொலை என ஆந்திராவைச் சேர்ந்த சிட்டிமல்லு என்பவர் புகார் அளித்துள்ளார். மேலும் இந்த கொலையில் ஆந்திராவைச் சேர்ந்த பிரபல நடிகர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம், கமம் என்கிற மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிட்டிமல்லு, நடிகை செளந்தர்யாவின் மரணம் விபத்தல்ல. நடிகை செளந்தர்யா ஜல்பள்ளி கிராமத்தில் உள்ள நிலத்தை பிரபல தெலுங்கு நடிகர் பெற நினைத்திருக்கிறார். அந்த நிலத்தை செளந்தர்யாவின் சகோதரர் அமர்நாத் விற்பனை செய்வதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். அவரின் மரணத்திற்குப் பிறகு அந்த நிலத்தை விற்பனை செய்யுமாறு அழுத்தம் கொடுத்து அந்த நிலத்தை சட்டவிரோதமாக பிரபல நடிகர் ஆக்கிரமித்திருக்கிறார் எனவும் புகாரில் கூறியிருக்கிறார்.
மேலும் கமம் கிராமத்தின் உதவி கமிஷனர் மற்றும் மாவட்ட அதிகாரி என புகார் அளித்தும், அரசாங்கம் அந்த நிலத்தை கையப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், நிலத்தை கையகப்படுத்தி ஆசிரமங்களுக்கும், ராணுவ அதிகாரிகள் குடும்பத்திற்கு வழங்குமாறும் கோரிக்கை விடுத்திருக்கிறார். நடிகை செளந்தர்யா மரணம் குறித்த புகார் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more: தொகுதி மறுவரையறை.. ஜெகன் மோகன் ரெட்டியை நேரில் சந்தித்த எ.வ.வேலு