TVK Vijay: விஜய் கல்வி விருது விழா 2.O… வெரைட்டியாக தயாராகும் உணவு வகைகள் என்னன்னு பாருங்க

தவெக தலைவர் விஜய் சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி விருது வழங்கும் விழாவின் இரண்டாவது கட்ட நிகழ்வு தற்போது தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மாணவர்கள், அவர்களது பெற்றோர்களுக்காக வெரைட்டியான உணவு வகைகள் தயாராகி வருகின்றன.

Jul 3, 2024 - 11:49
Jul 3, 2024 - 12:06
 0
TVK Vijay: விஜய் கல்வி விருது விழா 2.O… வெரைட்டியாக தயாராகும் உணவு வகைகள் என்னன்னு பாருங்க
TVK Vijay Education Award Function 2.0 Menu List

சென்னை: கோலிவுட்டின் முன்னணி ஹீரோவாக வலம் வரும் விஜய், விரைவில் அரசியலில் களமிறங்கவுள்ளார். இதனையடுத்து பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகளை செய்து வரும் விஜய், மாணவர்களுக்கும் கல்வி விருது விழா நடத்தி வருகிறார். கடந்தாண்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி விருதும், உதவித் தொகையும் வழங்கினார். அதேபோல், இந்தாண்டும் மாணவர்களுக்கு கல்வி விருதுகளை வழங்கி வரும் விஜய், அதனை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடத்தி வருவது அரசியல் ரீதியாக கவனம் பெற்றுள்ளது.  

சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கான்வென்ஷன் சென்டரில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது விஜய் கல்வி விருது வழங்கும் விழா. ஜூன் 28ம் தேதி முதற்கட்ட கல்வி விருது விழா நடைபெற்று முடிந்தது. அதில், அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 800 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு ஊக்கத் தொகை, விருது ஆகியவற்றையுடன் தடபுடலான விருந்தும் கொடுத்து அசத்தினார் விஜய். அதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது கட்ட விருது விழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. போலீஸார், பவுன்சர்கள் என பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தொடங்கிய விழாவிற்கு, சொன்ன நேரத்தில் சரியாக வந்து சேர்ந்தார் விஜய். 

இன்றைய விழாவில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், திருச்சி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில், முதல் மூன்று இடம் பிடித்த 10, 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். சுமார் 740க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் விழா அரங்கிற்கு வருகை தர, அவர்களுக்கு காலை உணவாக பொங்கல் பறிமாறப்பட்டது. அதேபோல் மதிய உணவிற்கும் தடபுடலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். 

அதன்படி இன்று மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவாக, சாதம், வடை, அப்பளம், அவியல், மோர், வெற்றிலை பாயாசம், இஞ்சி துவையல், தயிர் பச்சடி, அவரை மணிலா பொரியல், உருளை காரக்கறி, ஆனியன் மணிலா, செட்டிநாடு வத்தக்குழம்பு, கதம்ப சாம்பார், தக்காளி ரசம், சாண்ட்விச் ஸ்வீட் ஆகியவை ரெடியாகியுள்ளன. அதேபோல் கல்வி விருது விழா அரங்கிற்கு வெளியே மருத்துவ முகாம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த முறை நிகழ்ச்சிக்கு சென்றிருந்த ஒருவருக்கு திடீர் உடல்நிலை குறைவு ஏற்பட்டது. அப்போது ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதம் ஆனதால் விழா அரங்கிற்கு வெளியே மருத்துவ முகாமையும் ஏற்பாடு செய்துள்ளனர் தவெக நிர்வாகிகள். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow