ரஷ்யாவுக்கு ஆட்டம் காட்டும் உக்ரைன்.... ஜெலன்ஸ்கியின் பிளான் இதுதானா?

ரஷ்யாவின் இரண்டாவது முக்கிய பாலத்தை உக்ரைன் ராணுவம் தகர்த்தெறிந்ததால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Aug 20, 2024 - 02:19
Aug 20, 2024 - 15:01
 0
ரஷ்யாவுக்கு ஆட்டம் காட்டும் உக்ரைன்.... ஜெலன்ஸ்கியின் பிளான் இதுதானா?
ரஷ்யாவுக்கு ஆட்டம் காட்டும் உக்ரைன்

கடந்த 2022 பிப்ரவரி 24ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. 3 ஆண்டுகளாக தொடர்ந்து நீடிக்கும் இந்த போரில் உக்ரைன் நாட்டின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியது. ஆனாலும், ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் கடுமையாக போராடி வருகிறது. போரை நிறுத்துமாறு சர்வதேச நாடுகள் ரஷ்யாவை நேரடியாக வலியுறுத்தின. ஆனாலும், ரஷ்யா தனது தாக்குதலைத் தொடர்ந்த வண்ணம் உள்ளது. அதேநேரம் ரஷ்யாவின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் உதவி செய்து வருகின்றன.  

ரஷ்யாவின் கடுமையான தொடர் தாக்குதல்களுக்கு பிறகு சமீப காலமாக உக்ரைனின் கைகள் ஓங்கியுள்ளன. அதன்படி ரஷ்யாவுக்கு சொந்தமான கிட்டத்தட்ட 800 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை உக்ரைன் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், ரஷ்யாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான, நோர்ட் ஸ்ட்ரீம் இயற்கை எரிவாயு குழாய்களின் வெடிப்புகளின் பின்னணியில் உக்ரேனிய படைகள் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளன. இதுகுறித்து சர்வதேச அளவில் வெளியாகும் செய்திகளில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பின்னர், ரஷ்யாவை சேதப்படுத்துவதற்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் உள்ள பாலத்தை உக்ரைன் ராணுவம் தகர்த்துள்ளது. இதுதொடர்பான காணொளி ஒன்றையும் உக்ரைனின் விமான படை தளபதி பகிர்ந்துள்ளார். ஆனால் இந்த தாக்குதல் எப்போது நடத்தப்பட்டது என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை. கடந்த 6ம் தேதி ரஷ்ய பகுதிகளில் தாக்குதல் நடத்த ரணுவ படைகளையும் கவச வாகனங்களையும் உக்ரைன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது. 

தற்போது உக்ரைன் தகர்த்துள்ள பாலம் ரஷ்யாவின் 2வது முக்கிய பாலம் ஆகும். இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், “தற்போது ஒட்டுமொத்த தற்காப்பு நடவடிக்கைதான் எங்களது முதன்மையான பணியாகும். முடிந்தவரை ரஷிய போர் திறனை அழித்து அதிகபட்ச எதிர்தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வது. உக்ரைனுக்கு எல்லையில் பாதுகாப்பு மண்டலம் தேவை. பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்குவதே எங்கள் இலக்கு” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: திமுக முதலமைச்சருக்கு மூளை இருக்கிறதா? - இபிஎஸ் விளாசல் 

உக்ரைனின் இந்த அதிரடியான ஊடுருவலை சிறிதும் எதிர்பார்க்காத ரஷ்ய படைகள், தங்களது பகுதிகளை தற்காத்துக்கொள்ளும் முயற்சியில் பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow