மலையில் இருந்து உருண்டு விழுந்த பாறை - இடிபாடுகளில் சிக்கிய 7 பேரை மீட்கும் பணியில் மீட்புக்குழு தீவிரம்
திருவண்ணாமலையில் மண் சரிவு காரணமாக 7 பேர் இடிபாடுகளில் சிக்கி நிலையில், அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
அண்ணாமலையார் கோயில் மலையிலிருந்து உருண்டு வந்த பாறை வீட்டின் மேல் விழுந்ததில் 7 பேர் இடிபாடுகளில் சிக்கி நிலையில், அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் திருவண்ணாமலைக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளான நாச்சிப்பட்டு,நொச்சி மலை,அடி அண்ணாமலை, வேங்கிக்கால், ஏந்தல், நல்லவன் பாளையம், ஆடையூர்,கலர் கொட்டாய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்து பலத்த மழை காரணமாக வீட்டின் உள்ளே தண்ணீர் புகுந்து பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராத சூழ்நிலையும், தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வரும் நிலை உருவாகியுள்ளது.
குறிப்பாக திருவண்ணாமலை மாநகரத்தில் பெரியார் சிலை, காந்தி சிலை, அண்ணா சிலை, தேரடி வீதி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து சாலைகளிலும் தெருகளிலும் வெள்ள பெருக்கெடுத்து ஓடுகிறது.
திருவண்ணாமலையை இணைக்கும் 9 பிரதான சாலைகளிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், சாலைகள் துண்டிக்கப்பட்டு வாகனங்களை திருப்பி அனுப்பும் பணியில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டு வரும் வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் பின்புறம் அமைந்துள்ள 2668 அடி உயரம் கொண்ட மலையிலிருந்து சுமார் 80 அடி உயரத்தில் இருந்து பெரிய பாறை உருண்டு வந்து மூன்று வீடுகளில் மேல் விழுந்தது.
இந்த சம்பவத்தில் அந்த மூன்று வீடுகளிலும் ஏழு பேர் இடுபாடுகளில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியான நிலையில் விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்குழுவினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்,காவல் கண்காணிப்பாளர் சுதாகர்,உள்ளிட்ட அரசு துறை சார்ந்த அதிகாரிகள் நேற்று இரவு முழுவதும் அங்கே முகாமிட்டு பாதிக்கப்பட்ட வீடுகளில் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.
இடுபாடுகளை சிக்கியுள்ள மக்களை மீட்க முடியாததால் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரின் உதவியை கேட்டுள்ளோம் அவர்கள் காலை வந்து மீட்பு பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேலும், மலைப்பகுதியில் சுமார் 10,000 வீடுகள் இருக்கின்ற நிலையில் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாறை இடிந்து விழுந்த சம்பவத்தில் ஏராளமான வீடுகள் குடியிருப்புகள் சேதம் அடைந்து குடியிருப்பு வாசிகள் தங்களது அடிப்படை வசதிகளின்றி தவித்து வந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அவர்களை தனியார் பள்ளியில் தங்க வைத்து உணவுகளை அளித்து வந்து வருகின்றனர்.
தொடர்ந்து இன்று காலை இடுப்பாடுகளில் சிக்கி உள்ள குடும்பத்தினரை மீட்க 200- மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்புக் குழு தற்போது திருவண்ணாமலைக்கு வருகை தந்து திருவண்ணாமலை மலைப்பகுதி முழுவதும் தங்களது கட்டுப்பாட்டு கொண்டு வந்து பொதுமக்கள் யாரும் அவ்வழியாக செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். தொடர்ந்து மோப்ப நாய்கள் உதவியுடன் இடுபாடுகளில் சிக்கி உள்ள பொதுமக்களை தேடி வருகின்றனர்.
மேலும், இடர்பாடுகள், அப்பகுதியில், தீயணைப்பு மீட்பு குழுவினர் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
What's Your Reaction?