தமிழ்நாடு

திருட்டை ஒப்புக்கொள்ளச் சொல்லி போலீசார் சித்ரவதை.... ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரை..

திருட்டு சம்பவம் குறித்து தகவல் தெரிவித்த டிராவல்ஸ் உரிமையாளரை, அதே திருட்டை ஒப்புக்கொள்ள கூறி சித்ரவதை செய்த போலீசாருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது

திருட்டை ஒப்புக்கொள்ளச் சொல்லி போலீசார் சித்ரவதை....   ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரை..
திருட்டை ஒப்புக்கொள்ளச் சொல்லி போலீசார் சித்ரவதை.... ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரை..

.

கோவை மாவட்டம், போத்தனூரை சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் ஏ.ரூபன் என்பவர், கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி  வீட்டுக்கு திரும்பும்போது, அருகில் உள்ள வீட்டில் சந்தேகத்துக்கு இடமாக சிலர் நின்று கொண்டிருந்ததை பார்த்துள்ளார்.

 அவர்கள் யார் என பார்க்க முயற்சித்தபோது, திடீரென வீட்டுக்குள் இருந்து வந்த சிலர் தப்பி ஓடினர். அருகில் சென்றபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டதை அறிந்த ரூபன்,  போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ரூபனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, திருட்டை ஒப்புக் கொள்ளுமாறு மிரட்டி, 4 நாட்கள் வரை சட்ட விரோத காவலில் வைத்து சித்ரவதை செய்துள்ளனர். 

இதுசம்பந்தமாக ரூபன், மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், போலீசார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது நிரூபணமாகியுள்ளதாகக் கூறி,  
பாதிக்கப்பட்ட ரூபனுக்கு ஒரு மாதத்துக்குள் 75 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். 

இத்தொகையை போத்தனூர், செல்வபுரம் காவல்நிலையத்தைச் சேர்ந்த போலீசார் விஜயகுமார், சுஜய், கம்ருதீன் ஆகியோரிடம் தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் வசூலிக்கவும், மூவர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கவும் அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்.