Nagarjuna N Convention : நாகர்ஜுனா கட்டடம் இடிப்பு... ஐதராபாத் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் ஹைட்ரா அமைப்பு அதிர்ச்சி!

Nagarjuna N Convention Center Demolition : நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான கட்டடங்களை இடிக்க ஐதராபாத் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

Aug 26, 2024 - 12:17
Aug 26, 2024 - 14:10
 0
Nagarjuna N Convention : நாகர்ஜுனா கட்டடம் இடிப்பு... ஐதராபாத் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் ஹைட்ரா அமைப்பு அதிர்ச்சி!
ஐதராபாத் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Nagarjuna N Convention Center Demolition : தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பிரபல நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமாக 'N Convention’ என்ற கட்டடம் உள்ளது. மாதப்பூரில் உள்ள இந்த 27,000 சதுர அடி கட்டடத்தில் சுமார் 3000 பேர் அமர்க் கூடிய வகையில் ஒரு பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. N Convention என்ற பெயரிலான இந்த அரங்கை N 3 என்டர்ப்ரைசஸ் கட்டியெழுப்பியது. இந்த N 3 என்டர்ப்ரைசஸ் நடிகர், தயாரிப்பாளர் நாகார்ஜுனா அக்கினேனி மற்றும் நல்லா ப்ரீத்தம் இணைந்து நடத்தும் நிறுவனம் ஆகும். இந்த அரங்கில்தான் தற்போதைய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் மகளின் திருமண நிச்சயதார்த்தம், நடிகர்கள் வருண் தேஜ், லாவண்யா தம்பதி திருமண வரவேற்பு விழா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களின் குடும்ப நிகழ்வுகள் நடந்தன. சினிமா சூட்டிங்கும் நடக்கிறது. 

கடந்த சில ஆண்டுகளாகவே N Convention அரங்கம் தும்மிடிகுண்டா ஏரியின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்டுள்ளது என்றும், அதனால் மழை நீர் வடிகால் தடைபட்டு மழை பெய்யும் போதெல்லாம் 100 அடி சாலை, ஐயப்பா காலனி மற்றும் பிற பகுதிகள் வெள்ளக்காடாக ஆகின்றன என்ற புகார்கள் எழுந்து வந்தன. ஆனால் இதுகுறித்து நாகார்ஜுனாவிடம் இருந்து எந்த விளக்கமும் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மொத்தம் 29.24 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த அரங்கில் 10 ஏக்கருக்கு கட்டடங்கள் மட்டுமே உள்ளன. அதில், 3.12 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது 2014ம் ஆண்டே உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், இந்த கட்டடத்தின் ஆக்கிரமிப்புகளை ஐதராபாத் பேரிடர் மீட்பு மற்றும் சொத்து பாதுகாப்பு நிறுவனம் இன்று (ஆகஸ்ட் 24) காலை இடித்து அகற்றியது. பெரிய ராட்சத இயந்திரங்களுடன் சென்ற அதிகாரிகள், அரங்கின் 35% கட்டுமானங்களை இடித்து தள்ளினர். இதனால் அவருக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  

இதுதொடர்பாக நாகார்ஜுனா தனக்கு சொந்தமான கட்டடங்களை இடிக்க தடை விதிக்க வேண்டும் என ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தார். இதனை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான கட்டடங்களை இடிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

மேலும் படிக்க: பாலியல் புகாருக்கு மறுப்பு... குமுதம் செய்திகளுக்கு நடிகர் ரியாஸ் கான் பிரத்தியேகப் பேட்டி

இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 25) செய்தியாளர்களை சந்தித்த ஹைட்ரா அமைப்பின் ஆணையர் ரங்கநாத், “திம்மடிகுண்டாவில் உள்ள பல ஆக்கிரமிப்பு கட்டடங்களில் நாகார்ஜுனாவின் கட்டடங்களும் உள்ளன. மொத்தம் 3.5 ஏக்கர் ஏரி நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதில் சுமார் 10 ஆண்டு காலம் வணிக ரீதியாக சம்பாதித்து வந்துள்ளது தெரியவந்தது. இது சட்டப்படி குற்றமாகும். எனவேதான் ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ள கட்டிடங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டன’’ என்று கூறி அதற்கான செயற்கைக்கோள் புகைப்படத்தையும் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow