தமிழ்நாடு

Chennai School Boy : 9-ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் துன்புறுத்தல்.. ஆசியரை கைது செய்த போலீசார்

Chennai School Boy Harassment Case : சென்னை அசோக் நகர் தனியார் பள்ளியில் படித்து வந்த ஒன்பதாம் வகுப்பு மாணவனிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஆசிரியரை போக்சோ சட்டப்பிரிவில் போலீசார் கைது செய்தனர்.

Chennai School Boy : 9-ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் துன்புறுத்தல்.. ஆசியரை கைது செய்த போலீசார்
Chennai School Boy Harassment Case

Chennai School Boy Harassment Case : சென்னை அசோக் நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது.  இது குறித்து பெற்றோர் தனது மகனிடம் விசாரித்தபோது பள்ளியின் தமிழ் ஆசிரியர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறியதாக தெரிகிறது.

மாணவனுக்கு நோய் தொற்றும் ஏற்பட்டிருந்ததால், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.  இது குறித்து மாணவனின் பெற்றோர் குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யாமல், ஆசிரியர் தாக்கியது போன்று வழக்குப் பதிவு செய்து ஆசிரியரை காப்பாற்றும் நடவடிக்கையில் பள்ளி நிர்வாகமும், காவல்துறையும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: Murder Case : தகாத வார்த்தையால் திட்டியதால் காதலி தாயை கழுத்தை நெரித்து கொலை செய்த காதலன்

இதனால் ஆத்திரமடைந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று குமரன் நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து குமரன் நகர் போலீசார் போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து தமிழ் ஆசிரியர் சுதாகர் கைது செய்யப்பட்டார்.

கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் உள்ள பல பள்ளிகளில் மாணவர்கள்(School Students), ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசு பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியை அப்பள்ளியில் பணிபுரியும் இரண்டு பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் ஒரு இடைநிலை ஆசிரியர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக அம்மாணவியின் தயார் குற்றம்சாட்டினார்.

இதையடுத்து தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர். இப்படி சமீப காலமாக மாணவ- மாணவிகளுக்கு பள்ளியில் பணிப்புரியும் ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைகள் நிகழ்கின்றன. இதற்கு தமிழ்நாடு அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அதனால் தான் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.