K U M U D A M   N E W S

சென்னையில் 10 விமானங்கள் ரத்து; பயணிகள் திடுக்.. என்ன காரணம்?

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், ஏர் இந்தியாவின் 10 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

Actor Jayam Ravi Divorce Case: ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதி விவாகரத்தில் திடீர் திருப்பம்

விவாகரத்து வழக்கில் நடிகர் ஜெயம் ரவி  அவரின் மனைவி இடையே சமரச தீர்வு மையத்தின் மூலம் பேச்சு நடத்த சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொடைக்கானலில் இ-பாஸ் சோதனை தீவிரம் - அணிவகுத்து நின்ற வாகனங்கள்

சுற்றுலாத் தளமான கொடைக்கானலில் இ-பாஸ் சோதனை தீவிரமாக நடைபெற்று வருவதால், 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

குன்றத்தூர் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் - மக்கள் அவதி

பல்லாவரம் அருகே அனகாபுத்தூர் வழியாக குன்றத்தூர் செல்லும் சாலையில், ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலால் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

டேட்டிங் ஆப் மூலம் பழக்கம்.. 4 சவரன் நகையை அபேஸ் செய்ததாக பெண் புலம்பல்

டேட்டிங் ஆப் மூலமாக பழக்கமான ஆண் நண்பரோடு சென்று 4 சவரன் நகையை இழந்து விட்டதாக விவாகரத்து பெற்ற பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அச்சுருத்தும் டேட்டிங் கலாச்சாரம்... ஆப்பு வைக்கும் டேட்டிங் ஆப்-கள்!

விவாகரத்து பெற்ற பெண் டேட்டிங் ஆப் மூலமாக பழக்கமான ஆண் நண்பரோடு டேட்டிங் சென்று 4 சவரன் நகையை இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனமழை எதிரொலி: ஊட்டி மலை ரயில் சேவை ரத்து

கனமழை காரணமாக தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளதால், உதகை - குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

நிர்வாகிக்கு நேர்ந்த சோகம்... போரட்டத்தில் குதித்த அதிமுகவினர்.. ஸ்தம்பித்த சாலை

சிவகங்கை அதிமுக கிளை செயலாளர் கணேசன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து கொளையாளிகளை கைது செய்யக்கோரி சிவகங்கை எம்.எல்.ஏ. செந்தில்நாதன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னைக்கு படையெடுத்த மக்கள் - நிரம்பி வழியும் கிளாம்பாக்கம்

கிளாம்பாக்கம், தாம்பரம் பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

#JUSTIN: Paranur Tollgate Traffic: சென்னை நோக்கி படையெடுக்கும் மக்கள்.. திக்குமுக்காடிய சுங்கச்சாவடி

பரனூர் சுங்கச்சாவடி முதல் கூடுவாஞ்சேரி வரை போக்குவரத்து நெரிசல்

Diwali Holidays Tamil Nadu: பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம்

லீவ் நல்லா இருந்துச்சா..? பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம்

Today Headlines : 6 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Today Headlines Tamil | 04-11-2024 | KumudamNews

தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து சென்னையை நோக்கி படையெடுத்த வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புச் செய்திகளுடன் செய்திகள்

சென்னைக்கு வருபவர்களே "Wait" - நகர முடியாமல் திணறும் வாகன ஓட்டிகள்

தீபாவளி முடிந்து மக்கள் சென்னை திரும்புவதால் மதுராந்தகம் அருகே உள்ள சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மதுரையில் களைகட்டும் மது விற்பனை... குடிமகன்களால் நிரம்பி வழியும் டாஸ்மாக்

தீபாவளி நாளான இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில், மதுரையில் இன்று வழக்கமான கூட்டத்தை விட அதிகளவில் மது பிரியர்கள் மதுக்கடையில் குவிந்ததால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

தீபாவளி பண்டிகை.. சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பதால் தாம்பரம் முதல் சிங்கபெருமாள்கோவில் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கனமழை எதிரொலி... சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்

சென்னையில் பெய்த கனமழையால் தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இடைவிடாமல் கொட்டிய மழை... சாலைகளில் பெருக்கெடுக்கும் மழைநீர்

நாகர்கோவிலில் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர். சாலைகளில் மழைநீர் தேங்கியதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிப்பு

உறவினர்களுக்கு தெரிவிக்காமல் கண் தானம்? - சுகாதாரத்துறை விளக்கம்

உறவினர்களுக்கு தெரிவிக்காமல் இறந்தவர் கண்களை தானமாக எடுக்கும் நடைமுறையை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் உறவினர்களின் அனுமதி இல்லாமல் கண்களை தானமாக எடுக்கும் நடைமுறை பின்பற்றப்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Dhanush: தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரத்து வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு... அப்போ அதுதான் உண்மையா?

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவகாரத்து கோரிய வழக்கில், இருவரும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாதது ரசிகர்கள் மத்தியில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிராஃபிக் கவலை இனி வேண்டாம்.. 3 மணி நேர பயணம் 19 நிமிடத்தில்.. வரப்போகிறது பறக்கும் டாக்ஸி

விமான நிலையத்திற்கும் எலக்ட்ரானிக்ஸ் சிட்டிக்கும் இடையிலான பயண நேரத்தை மூன்று மணி நேரத்திலிருந்து 19 நிமிடங்களாக குறைக்கும் வகையிலான பறக்கும் டாக்சிகள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கை.. 213 மருத்துவ முகாம்கள் அமைப்பு

சென்னையில் மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கையாக 213 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மருத்துவ முகாம்களுக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

ஸ்ட்ரெச்சரில் மூதாட்டி.. கொட்டும் மழையில் நேர்ந்த கொடுமை - நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சி காட்சி

திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொட்டும் மழையில் மூதாட்டியை காக்க வைத்த அவலம் நிகழ்ந்துள்ளது, சிடி ஸ்கேன் எடுக்க பணம் கட்டும் வரை கொட்டும் மழையில் ஸ்ட்ரெச்சரில் மூதாட்டி இருந்துள்ளார்.

டாஸ் கூட போடவில்லை.. மழையால் முதல்நாள் ஆட்டம் ரத்து.. ரசிகர்கள் சோகம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் மழையால் டாஸ் கூட போடாமல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

விழுந்து கிடக்கும் மின்கம்பங்கள் - அந்த வழி போகாதீங்க.. வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

சேலம் மாவட்டம் மஞ்சக்குட்டை கிராமம் செல்லும் மலைப்பாதையில் மரம் வேரோடு சாய்ந்து மின் கம்பம் மீது விழுந்தது. இதையடுத்து வரிசையாக மின் கம்பங்கள் சாலையில் சாய்ந்த நிலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

திருப்பதியில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து - காரணம் என்ன?

அதிக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து வரும் 16-ம் தேதி திருப்பதியில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.