தமிழ்நாடு

பார்க்கிங் வசதி இல்லாத உணவகங்களுக்கு ஆபத்து..!

சென்னையில் உரிய பார்க்கிங் வசதி இல்லாத 80 உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை போக்குவரத்துக் காவல் துறை சென்னை மாநகராட்சிக்கு பரிந்துரை செய்துள்ளது.

பார்க்கிங் வசதி இல்லாத உணவகங்களுக்கு ஆபத்து..!
பார்க்கிங் வசதி இல்லாத உணவகங்களுக்கு ஆபத்து..!

போக்குவரத்து நெரிசல்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 471 பேருந்து சாலைகள் உள்ளன. அவற்றில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, 33 மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணியும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. மேலும் பிரதான சாலைகளில் நெரிசலை குறைப்பதற்காக ஆங்காங்கே யூ–டன் வசதி வழங்கி சிக்னல் இன்றி வாகனங்கள் செல்லும் படி போக்குவரத்தை மாற்றி உள்ளனர். 

இருப்பினும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்கதையாக இருப்பதால், இதற்கான காரணம் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில், சாலையை ஆக்கிரமித்து இயங்கும் சிற்றுண்டி கடைகள் மட்டுமின்றி போதுமான வாகன நிறுத்தம் இன்றி செயல்படும் உணவகங்களும் தான் என்பது கள ஆய்வில் தெரியவந்தது.

சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் போதிய வாகன நிறுத்தம் இன்றி செயல்படும் உணவகங்கள் பட்டியல் மண்டல வாரியாக எடுக்கப்பட்டன. இதில் சென்னையில், 80 உணவகங்கள் போதுமான வாகன நிறுத்தம் இன்றி செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது. அந்த உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகராட்சிக்கு, சென்னை காவல் துறை பரிந்துரை செய்துள்ளது. விரைவில் காவல் துறை பரிந்துரை செய்த, 80 உணவகத்தின் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளனர்.

Read More: "மருத்துவ பாடத்திட்டம் தமிழில் வேண்டும்" - அமித்ஷா வலியுறுத்தல்..!

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஒரு உணவகங்கள் தங்கும் விடுதிகள் உள்ளிட்டவை அமைப்பதற்கு  மாநகராட்சியில் விண்ணப்பிக்கும் போது, உரிய வாகன நிறுத்த வசதி தொடர்பாக போக்குவரத்து போலீசார் தடையில்லா சான்று வழங்குவது முக்கியம் என தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு ஆணைப்படி உணவகங்களின் இருக்கைகளுக்கு ஏற்றார் போல் வாகன நிறுத்தம் இருக்க வேண்டும் என தெரிவித்தது.

பார்க்கிங் வசதி

அந்த வகையில் உயர்தர ஏசி உணவகங்கள், பட்ஜெட் அடிப்படையிலான ஏசி உணவகங்கள் மற்றும் ஏசி இல்லாத உணவகங்கள், பார்ட்டி கால்கள், தங்கும் விடுதிகள் என ஐந்து வகையாக பிரிக்கப்பட்டு அவற்றில் இருக்கைகளுக்கு அடிப்படையாக இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்தும் அளவிற்கு பார்க்கின் வசதி செய்யப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

எந்த வகையில் குறைந்தபட்சம் 20 இருக்கைகள் கொண்ட இடங்களில் நான்கு நான்கு சக்கர வாகனங்களும் இருசக்கர வாக னங்களுக்கு இருக்கும் வகையில் இடங்கள் இருக்க வேண்டும் எனவும், ஓட்டல் இருக்கைகளுக்கு அடிப்படையாக வைத்து இது நான்கு சக்கரம் மற்றும் இரு சக்கர வாகனங்கள் இருக்க இடம் ஒதுக்கப்பட வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டது. அதிகபட்சமாக 120 க்கு மேலாக இருக்கைகள் கொண்ட உயர்தர ஏசி உணவகங்களில் 28 நான்கு சக்கர வாகனமும் 35 இருசக்கர வாகனங்களும் இருக்க வசதிகள் செய்து தரப்பட்டு இருக்க வேண்டும் இதுபோன்று ஐந்து வகையான கேட்டகிரியில் இருக்கும் உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் ஆகியவற்றிற்கு எண்ணிக்கைக்கு ஏற்ப வாகன நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More: Sunil Chhetri: மீண்டும் களத்திற்கு திரும்பிய சுனில் சேத்ரி.. மகிழ்ச்சியில் கால்பந்து ரசிகர்கள்..!

இந்த அடிப்படையில் தான் போக்குவரத்து போலீசார் ஆய்வு மேற்கொண்டு வாகனம் நிறுத்த இடம் அளிக்கப்படாமல் போக்குவரத்து நெரிசல் காரணமாக உணவகங்கள் பட்டியல் எடுத்து நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்கு சென்னை போக்குவரத்து போலீசார் கடிதம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.