பெண்கள் தினம்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று (மார்ச்- 08) தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் மகளிர் அதிகாரம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை முன்னிறுத்தும் விதமாக ஒரு சிறப்பு மினி மாராத்தான் போட்டி நடைபெற்றது. காலை 06.30 மணி முதல் காலை 08.00 மணி வரை சென்னை E.C.R சாலையில் உள்ள எம்.ஜி.எம் முதல் முட்டுக்காடு வரை நடைப்பெற்றது. இந்த மாராத்தானில் 4,000 த்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். குறிப்பாக ஹிந்துஸ்தான் கல்லூரி, முகமது சதாக் ஏ.ஜே கல்லூரி, டாக்டர். தனபாலன் கல்லூரி, ஜெப்பியார் கல்லூரி, இந்திய கடல் பல்கலைகழகம் கல்லூரி, ராகாஸ் டென்டல் கல்லூரி, AMET கடற்படை பல்கலைகழகம், சத்யபாமா பல்கலைகழகம், செயின்ட் ஜோசப் கல்லூரி, மற்றும் தாம்பரம் மாநகர காவல்துறையின் பெண் காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Read More: விஜய் கலந்து கொண்ட நோன்பு நிகழ்ச்சி.. லட்சக்கணக்கில் பணத்தை பறிகொடுத்த நிர்வாகிகள்
மினி மாரத்தான்
இந்த மினி- மாரதான் போட்டியை பிரபல தமிழ்த் திரைப்பட நடிகை சினேகா மற்றும் மகேஷ்வரி I.P.S., கூடுதல் காவல் ஆணையர், தாம்பரம் மாநகர காவல்துறை ஆகியோர் கொடி அசைத்து துவக்கிவைத்தனர். மினி- மாரத்தான் MGM முதல் முட்டுக்காடு வரை 5 கிலோமீட்டர் தொலைவில் நடைப்பெற்றது. இதில் பங்கேற்ற அனைவருக்கும் தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் சார்பில் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வு சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடவும், பெண்களின் அதிகாரத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் ஊக்குவிக்கவும் நடத்தப்பட்டது.
தாம்பரம் மாநகர காவல்துறை
மினி- மாரத்தான் நடைபெற்ற பாதையில் போலீஸார் முழுப் பாதுகாப்பு வழங்கினர். போக்குவரத்து சீராக இயக்கப்படும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த மினி-மாரத்தான் பெண்களுக்கான உடல் ஆரோக்கிய விழிப்புணர்வு மற்றும் பெண்கள் அதிகாரத்தை முன்வைக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்தது. சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்ட இந்த நிகழ்வை அனைவரும் பாராட்டியுள்ளனர். தாம்பரம் மாநகர காவல்துறையின் முனைப்பால் இந்த நிகழ்வு வெற்றிகரமாக நடந்துமுடிந்தது.
Read More: திமுக எப்படி நம்மை ஏமாற்றுவார்கள் என்று இப்போதுதான் தெரிகிறது- விஜய் குற்றச்சாட்டு