தமிழ்நாடு

கட்டுப்பாடுகளை மீறினால் கைது சீமானுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..!

காவல்துறை சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என சீமானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கட்டுப்பாடுகளை மீறினால் கைது சீமானுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..!
கட்டுப்பாடுகளை மீறினால் கைது சீமானுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..!

நடிகை தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை வளசரவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் 2011-ல் புகார் அளி்த்திருந்தார். அதையடுத்து போலீசார் சீமானுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். 

நடிகை அளித்த புகாரின் பேரில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடந்த 2011 ஆம் ஆண்டு பாலியல் துன்புறுத்தல் உள்பட பிரிவுகளிற் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்ததால் 12 வாரத்திற்குள் விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி வளசரவாக்கம் போலீசார் சீமானுக்கு சம்மன் கொடுத்தனர். ஆனால் அவர் இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை. வழக்கறிஞர்கள் காவல் நிலையத்திற்கு வந்து கடிதம் மூலமாக விளக்கம் அளித்தனர். இதன் பிறகு வளசரவாக்கம் போலீசார் மீண்டும் ஒரு சம்மனை தயார் செய்து நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் ஒட்டினர். 

அந்த சம்மனில் நாளை காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 10 கட்டுப்பாடுகளை போலீசார் சம்மனில் தெரிவித்துள்ளனர். அந்த கட்டுப்பாடுகளை மீறினால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.