சினிமா

GOAT: கோட் ரிலீஸாகும் திரையரங்குகளில் தவெக கொடி... விஜய்யின் ரகசிய உத்தரவு என்ன..?

விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. இத்திரைப்படம் ரிலீஸாகும் திரையரங்குகளில் தவெக கொடியை பயன்படுத்துவது குறித்து விஜய் ரகசியமாக உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

GOAT: கோட் ரிலீஸாகும் திரையரங்குகளில் தவெக கொடி... விஜய்யின் ரகசிய உத்தரவு என்ன..?
கோட் ரிலீஸாகும் திரையரங்குகளில் தவெக கொடி..?

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படத்துக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. விஜய்யுடன் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா, ஜெயராம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் கோட் திரைப்படம் அதிகாலை 4 மணிக்கு திரையிடப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள விஜய் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். 

இந்நிலையில், கோட் வெளியாகும் திரையரங்குகளில் தவெக கொடி பயன்படுத்துவது குறித்து ரசிகர்களுக்கு ரகசிய உத்தரவு பறந்துள்ளதாம். கோலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய், அடுத்து அரசியலில் களமிறங்கவுள்ளார். இதற்காக தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள விஜய், சில தினங்களுக்கு முன்னர் இதன் கொடியையும் அறிமுகப்படுத்தினார். மேலும், சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தவெக கொடியை ஏற்றி வைத்தார். இன்னொரு பக்கம் தவெக முதல் மாநாட்டுக்கான ஏற்பாடுகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. 

விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த மாநாட்டில் தவெக கொடி குறித்து விஜய் விளக்கம் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பரபரப்புக்கு மத்தியில் விஜய்யின் கோட் திரைப்படம் நாளை வெளியாகிறது. அப்போது தவெக கொடியை பயன்படுத்த விஜய் ரசிகர்கள் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது, கோட் வெளியாகும் திரையரங்குகளில், படம் பார்க்க வரும் ரசிகர்களிடம் தவெக கொடியை விநியோகிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதாம்.

மேலும் படிக்க - ஹேமா கமிட்டி... கேரவனில் கேமரா... ரவுண்டு கட்டிய சரத்குமார்!

அதன்படி, கோட் படம் பார்க்க 50 லட்சம் ரசிகர்கள் வருவார்கள் எனவும், அவர்கள் அனைவருக்கும் தவெக கொடி வழங்க வேண்டும் என ரசிகர்கள் பிளான் செய்து வருகிறார்களாம். இந்நிலையில், கோட் திரையிடப்படும் தியேட்டர்களில் தவெக கொடியை பயன்படுத்தக் கூடாது என விஜய் உத்தரவிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் கோட் படத்தை திரையரங்குகளில் பார்க்க வேண்டும் எனவும், தவெக கொடிகளை விநியோகிக்க வேண்டாம் என்றும் விஜய் அட்வைஸ் செய்துள்ளாராம். 

அதேபோல், திரையரங்குகளுக்கு வெளியேவும் தவெக கொடியை ஏற்றவோ பறக்க விடவோ கூடாது என விஜய் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக கொடியை விளம்பரப்படுத்த கோட் படம் பார்க்க வரும் ரசிகர்களை தொந்தரவு செய்யக் கூடாது எனவும் கண்டிஷன் போட்டுள்ளாராம். விஜய் போட்டுள்ள இந்த உத்தரவுகளை அவரது ரசிகர்கள் ஃபாலோ செய்வார்களா அல்லது, தவெக கொடியை விநியோகிப்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்நிலையில், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கோட் படத்திற்கான டிக்கெட்டுகள் முழுமையாக விற்றுத் தீர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.