சினிமா

Suriya: சூர்யா சொந்தமாக விமானம் வாங்கினாரா... விலை 120 கோடியா..? இதுதான் உண்மை!

Actor Suriya Own Plane Rumors : நடிகர் சூர்யா 120 கோடி ரூபாய் மதிப்பில் பிரைவேட் ஜெட் விமானம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகின. இதுகுறித்து சூர்யா தரப்பில் இருந்து உண்மையான தகவல்கள் வெளியாகியுள்ளன.

Suriya: சூர்யா சொந்தமாக விமானம் வாங்கினாரா... விலை 120 கோடியா..? இதுதான் உண்மை!
சொந்த விமானம் - சூர்யா மறுப்பு

Actor Suriya Own Plane Rumors : நடிகர் சிவகுமாரின் மகனாக சினிமாவில் அறிமுகமான சூர்யா, ஆரம்பத்தில் ஹிட் படங்கள் இல்லாமல் தடுமாறினார். பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த நந்தா திரைப்படம் அவருக்கு மிகப் பெரிய கம்பேக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்த சூர்யா, சொந்தமாக படம் தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். ஒருபக்கம் சிறுத்தை சிவா இயக்கியுள்ள கங்குவா படத்தில் நடித்த சூர்யா, இன்னொரு பக்கம் அவரது சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக்கை தயாரித்தார். இப்படத்தில் அக்ஷய் குமார் ஹீரோவாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கங்குவாவை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்து வரும் சூர்யா, விரைவில் பாலிவுட்டிலும் ஹீரோவாக என்ட்ரியாகவுள்ளார். இதனால் மும்பையில் பிளாட் வாங்கியுள்ள சூர்யா, தற்போது குடும்பத்துடன் அங்கேயே வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அடிக்கடி சென்னை டூ மும்பை, மும்பை டூ சென்னை என விமானத்தில் பறந்தபடி இருக்கிறார் சூர்யா. இந்நிலையில் தான் சூர்யா சொந்தமாக விமானம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. சொகுசு விமானமான இதன் மதிப்பு 120 கோடி ரூபாய் எனவும், இதில் ஏராளமான வசதிகள் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. 

இந்தி, தெலுங்கு திரையுலகில் பல நட்சத்திரங்கள் சொந்தமாக விமானம் வைத்துள்ளனர். அதேபோல், கோலிவுட்டில் நயன்தாரா சொந்தமாக ஜெட் விமானம் வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த வரிசையில் சூர்யாவும் 120 கோடி மதிப்பில் விமானம் வாங்கியுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் தீயாகப் பரவி வந்தது. இந்நிலையில், இதுகுறித்து சூர்யா தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சூர்யா சொந்தமாக விமானம் வாங்கியுள்ளதாக வெளியான தகவலில் துளியும் உண்மையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவா இயக்கியுள்ள கங்குவா, அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், அதேநாளில் ரஜினியின் வேட்டையன் திரைப்படம் ரிலீஸாகவுள்ளது. இதனால் இந்த இரண்டு படங்களுக்கும் சமஅளவில் ஸ்க்ரீன்கள் கிடைப்பதில் சிக்கல்கள் எழுந்துள்ளன. அதேபோல், பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் வேட்டையனுடன் மோதினால் கங்குவாவுக்கு பாதிப்பு ஏற்படும் என படக்குழு யோசித்து வருகிறது.

மேலும் படிக்க - மாரிசெல்வராஜ்ஜின் வாழை டிவிட்டர் விமர்சனம்

அதாவது வேட்டையன் படத்துடன் கம்பேர் செய்தால், கங்குவா மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. அதனால் கங்குவா தனியாக வெளியானால் மட்டுமே ஓரளவு பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் லாபகரமாக இருக்கும். வேட்டையன் படத்தில் ரஜினி, அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில் உள்ளிட்ட மற்ற நடிகர்களின் சம்பளம் தவிர, வேறு பெரிதாக பட்ஜெட் செலவில்லை. எனவே கங்குவாவுடன் மோதினாலும் வேட்டையனுக்கு லாபம் கிடைத்துவிடும். ஆனால், கங்குவா படத்தின் வசூலில் தான் பெரிய அடி விழும் என்பதால், ரிலீஸ் தேதி மாற்றப்படலாம் எனத் தெரிகிறது.