சென்னை: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட பலர் நடிக்கும் திரைப்படம் விடாமுயற்சி. லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள விடாமுயற்சி ரோட் ஷோ மூவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தாண்டு தொடங்கிய விடாமுயற்சி ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் ஒரேயொரு பாடல் காட்சி மட்டுமே படமாக்கப்படவுள்ளதாகவும், டப்பிங் வேலைகள் 80% முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்றது. ஃபைனல் போர்ஷனை மட்டும் ஐதராபாத்தில் ஷூட் செய்து வருகிறார் மகிழ் திருமேனி. இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார் த்ரிஷா. அதில், அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் ஆகியோருடன் படக்குழுவினரும் இருந்தனர். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில், படக்குழு தரப்பில் இருந்து புதிய போஸ்டர்களும் வெளியாகியுள்ளன.
விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் நடிக்கும் நடிகர்களை அறிமுகப்படுத்தி வரும் படக்குழு, தற்போது சஞ்சய் சரவணன், தசரதி ஆகியோர் நடிப்பதையும் கன்ஃபார்ம் செய்துள்ளது. இன்று (ஆல.20) விடாமுயற்சி அப்டேட் வெளியாகவுள்ளதாக காலை முதல் செய்திகள் வெளியாகின. இதனால் இந்த அப்டேட் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதியாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் நடிகர்கள் பற்றிய அப்டேட்டை மட்டும் வெளியிட்டுள்ளது படக்குழு.
மேலும் படிக்க - கோட் ரிலீஸாகும் தியேட்டர்களில் தவெக கொடி
இதனால் கடுப்பான அஜித் ரசிகர்கள், தயவுசெய்து விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிக்க வேண்டும் என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். விஜய்யின் கோட் ரிலீஸுக்கு ரெடியாகவிட்ட நிலையில், ரஜினியின் வேட்டையன், சூர்யாவின் கங்குவா, சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் போன்ற பெரிய பட்ஜெட் படங்களின் ரிலீஸ் தேதிகளை அந்தந்த படக்குழுவினர் அறிவித்துவிட்டனர். ஆனால், விடாமுயற்சி ரிலீஸ் தேதி மட்டும் இன்னும் உறுதியாகவில்லையே என அஜித் ரசிகர்கள் புலம்பி தீர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், விடாமுயற்சி திரைப்படம் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக தீபாவளி ரேஸில் விடாமுயற்சி படத்தை களமிறக்க முடிவு செய்துள்ளதாம் விடாமுயற்சி படக்குழு. இதுகுறித்த அப்டேட் இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.